சொல் பொருள்
கா – சோலை
கழனி– வயல்
சொல் பொருள் விளக்கம்
காவும் கழனியும் மருதம் சார்ந்தனவே. கோயில் முதலியவற்றுக்கு அறப்பொருளாக வழங்குவார் ‘காவும் கழனியும்’ வழங்கிய செய்தி செப்பேடு கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றது. முல்லைக் காட்டினை வேறுபடுத்திக் காட்டுவது. இக்காவும் கழனியும் என்க. கா என்பது கான். கானம், கானகம், காவு எனவரின் அது முல்லையும் குறிஞ்சியும் சார்ந்ததாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
செம்மைப்படுத்துதலில் மொழிக்கே
செல்வாக்கு
சிறப்பை பதியும்போது செய்பவருக்கு
மனநிறைவு
மொழித்தொண்டே முதல் தொண்டு
இராசீ (இராஜா சீனிவாசன்)