Skip to content
கைதை

கைதை என்பது ஒரு வகைதாழைமரம்

1. சொல் பொருள்

(பெ) தாழை,

2. சொல் பொருள் விளக்கம்

பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர். கடற்கரை மணல்வெளியில் வளர்வது. இது நிழல் தரும் மரம். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்

 • இப்பூவின் இதழ்கள் உண்மையில் அந்த மரத்தின் கிளைகள். அதில் நாரைகள் பெருமீனுக்காக அயிரை மீனைக் கௌவாமல் காத்திருக்கும்.
 • கைதைமலரை மேலே தூக்கி ஒடித்துப் பறிறிப்பார்கள்.
 • கைதைமரத்தோரம் குதிரைவண்டித் தேரை நிறுத்துவர்
 • நண்டு கைதைக் கிளைகளில் பதுங்கிக்கொள்ளும்
 • அன்னப் பறவைகள் கைதையில் அமராமல் ஓடிவிடும்
 • கைதைமலரை மேலே தூக்கி ஒடித்துப் பறிறிப்பார்கள்
 • கைதைமலர் வானத்தில் சுடர் வீசும் கதிரவன் போலத் தோற்றமளிக்கும்
 • ஞாழல், புன்னை, கைதை, செருந்தி ஆகிய பூக்களில் ஞிமிறு-வண்டு இமிரும். தும்பி-வண்டு ஊதும்
 • படப்பையில் கைதையை உண்ணாமல் எருமை நெய்தல் மலரை மேயும்.
கைதை
கைதைமலர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

fragrant screw pine, Pandanus odoratissimus

கைதை
கைதைப்பழம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் – நற் 178/2-5

தாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால்
இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
கழியின் கரையில் தான் திரியும் பக்கங்களில் சிறிய மீனைப் பிடித்து உண்ணாமல்
தாழையின் அழகிய வளைந்த கிளையில் தனிமைத்துயருடன் தங்கியிருக்கும்

கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை - குறி 83

நீல் நிற புன்னை தமி ஒண் கைதை /வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் - நற் 163/8,9

கைதை அம் கானல் துறைவன் மாவே - நற் 163/12

கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் - நற் 178/5

கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் - நற் 349/3

கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு - குறு 304/7

கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே - அகம் 100/18

கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் - அகம் 170/9

கைதை அம் படு சினை கடும் தேர் விலங்க - அகம் 210/12

புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும் - கலி 127/2

கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான் - திணை50:41/2
கைதை
கைதை
கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் - தேவா-சம்:1550/1

வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய - தேவா-சம்:2430/3

இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் - தேவா-சம்:2698/3

வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் - தேவா-சம்:2727/1

கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் - தேவா-அப்:1013/2

கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை 
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே - தேவா-சுந்:724/3,4

கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் - தேவா-சுந்:775/3

கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் - தேவா-அப்:115/1

கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே - தேவா-சம்:854/4

கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும் - தேவா-சம்:3130/2

தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த - தேவா-அப்:344/3

கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை - திருக்கோ:199/2

போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் - 1.திருமலை:2 29/4

குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன - 1.திருமலை:5 96/2,3

நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் - 4.மும்மை:5 10/4

கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை - 4.மும்மை:5 36/4

தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் - 6.வம்பறா:1 608/4

கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை 
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் - 8.பொய்:6 4/2,3

மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி - நாலாயி:1184/3

துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி - நாலாயி:1186/3

அருகு கைதை மலர கெண்டை - நாலாயி:1366/3

கைதை வேலி கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1724/4

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ - நாலாயி:1238/3

முருகு வண்டு உன் மலர் கைதையின் நீழலில் முன் ஒரு நாள் - நாலாயி:1769/2

கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும்
 புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே - நாலாயி:1773/3,4

முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி - சீறா:170/1

மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து - சீறா:1108/2

முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் - சீறா:1004/1

கரை எலாம் புன்னை கானமும் கண்டல் அடவியும் கைதை அம் காடும் - வில்லி:6 18/3

அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு அரி ஏறே ஆனின் தீம் பால் - வில்லி:45 20/2

புன்னையின் புது மலர் புனைந்து கைதையின்
 மென் நிழல் வைகினார் விலாச வீரரே - வில்லி:11 104/3,4

கைதை வேலி நெய்தல் அம் கானல் - புகார்:6/150

கைதை வேலி கழி_வாய் வந்து எம் - புகார்:7/187

கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு - சிந்தா:3 546/2

கரும் தகைய தண் சினைய கைதை மடல் காதல் - கிட்:10 77/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *