Skip to content
கோங்கம்

கோங்கம் என்பதன் பொருள்ஒரு வகை இலவ மரம்.

1. சொல் பொருள்

ஒரு வகை இலவ மரம், பூ

2. சொல் பொருள் விளக்கம்

கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.

  1. கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர்
  2. கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்
  3. எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும்
  4. மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்
  5. கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்
  6. கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.
  7. மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.
  8. கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Cochlospermum gossypium;

கோங்கம் முகை
கோங்கம் முகை

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

காட்டில் மரம் நிறையப் பூத்திருக்கும்

பல் பூ கோங்கம் அணிந்த காடே – நற் 202/11

எல்லாப் பருவத்திலும் பூக்கும்.

பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் – பரி 19/79

பூக்கள் அகல விரிந்திருக்கும்.

குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73

இதன் பூந்தாது பொன் நிறத்தில் இருக்கும்.

புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12

இது மணம் மிக்கது. மலையிலும் வளரக்கூடியது.

தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16

நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம் - தேம்பா:32 11/2

பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள் - திணை150:63/3

தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப - திணை150:65/1

பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் - திணை150:70/2

குருகிலை மருதம் விரி பூ கோங்கம்/போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி - குறி 73,74

கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை - நற் 86/7

பல் பூ கோங்கம் அணிந்த காடே - நற் 202/11

திணி நிலை கோங்கம் பயந்த - ஐங் 343/2

முறி இணர் கோங்கம் பயந்த மாறே - ஐங் 366/5

பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரி 19/79

புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப - கலி 33/12

தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் - கலி 42/16

முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை - அகம் 99/5

ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் - ஆரண்:10 96/2

பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின் - சிந்தா:7 1558/3

குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை - சிந்தா:8 1918/2

பொன் நிற கோங்கம் பொன் பூம் குன்று என பொலிந்த மேனி - சிந்தா:10 2257/1

நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர் - சிந்தா:7 1608/2

குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் - மது:12/84

கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை - வஞ்சி:25/17

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் - மது:11/207

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - மது:13/151

கோங்கம் குறுகல் செல்லார் அயல - இலாவாண:12/105

கோங்கம் தட்டம் வாங்கினர் வைத்தும் - இலாவாண:14/24

கோங்கமும் குரவும் கொடி குருக்கத்தியும் - இலாவாண:12/14

நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் - 1.திருமலை:2 28/4

கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை - 6.வம்பறா:1 303/1

குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் - திருக்கோ:205/1

வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை - தேவா-சம்:1083/1

கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் - தேவா-சம்:1524/1

குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் - தேவா-சம்:2710/3

குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி - தேவா-அப்:824/3

குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி - தேவா-அப்:952/2

கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் - தேவா-அப்:1483/1

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் - தேவா-சுந்:362/3

கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:3183/1

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை - தேவா-சம்:3778/1

மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி - தேவா-சுந்:752/2
கோங்கம் மலர்
கோங்கம் மலர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *