Skip to content
தாழை

தாழை என்பதுமணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம்.

1. சொல் பொருள்

(பெ) 1. மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம், 2. தெங்கு, தென்னை மரம், தெங்கம்பாளை, 3. தாழை மடலிலிருந்து உரிக்கப்படும் நார்,

2. சொல் பொருள் விளக்கம்

நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர். கடற்கரை மணல்வெளியில் வளர்வது. தாழையின் மடல் பெரியது

தாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது

இளமையில் வாழைத்தண்டு போன்று இருக்கும் மகளிர் குறங்கு(மால்-தொடை) முதுமையில் தாழைமரத்துத் தண்டு போல மாறிவிடுமாம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

 coconut tree, fragrant screw pine,Pandanus tectorius, Pandanus odoratissimus, fibre made from the leavs of screw pine, Pandanus fascicularis, Pandanus odorifer

தாழை
தாழை

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தாழை
தாழை
வாழை முழு_முதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 307,308

வாழையின் பெரிய முதல் துணியத், தெங்கின்
இளநீரையுடைய சீரிய குலை உதிர, (அவ்விரண்டையும்)மோதி

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 146

அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின்

வாழை முழு_முதல் துமிய தாழை/இளநீர் விழு குலை உதிர தாக்கி - திரு 307,308

தாழ் தாழை தண் தண்டலை - பொரு 181

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146

தாழை முடித்து தருப்பை வேய்ந்த - பெரும் 264

வீழ் இல் தாழை குழவி தீம் நீர் - பெரும் 357

நிலவு கானல் முழவு தாழை/குளிர் பொதும்பர் நளி தூவல் - மது 114,115

தாழை தளவம் முள் தாள் தாமரை - குறி 80

வீழ் தாழை தாள் தாழ்ந்த - பட் 84

மடல் தாழை மலர் மலைந்தும் - பட் 88

வால் இணர் மடல் தாழை/வேலாழி வியன் தெருவில் - பட் 118,119

சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை/பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு - நற் 19/2,3

வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல் - நற் 78/4

திரை முதிர் அரைய தடம் தாள் தாழை/சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய - நற் 131/4,5

தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு - நற் 203/2

கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை/எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு - நற் 203/4,5

துறு கடல் தலைய தோடு பொதி தாழை/வண்டு படு வான் போது வெரூஉம் - நற் 211/7,8

அரவு வாள் வாய முள் இலை தாழை/பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் - நற் 235/2,3

தடம் தாள் தாழை குடம்பை நோனா - நற் 270/1

ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ - நற் 299/2

பல் பூ கானல் முள் இலை தாழை/சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ - நற் 335/4,5

வெள் வீ தாழை திரை அலை - குறு 163/4

தடவு நிலை தாழை சேர்ப்பற்கு - குறு 219/6

தயங்கு திரை பொருத தாழை வெண் பூ - குறு 226/5

வீழ் தாழ் தாழை ஊழ்-உறு கொழு முகை - குறு 228/1

வாள் போல் வாய கொழு மடல் தாழை/மாலை வேல் நாட்டு வேலி ஆகும் - குறு 245/3,4

அடைகரை தாழை குழீஇ பெரும் கடல் - குறு 303/2

தாழை தைஇய தயங்கு திரை கொடும் கழி - குறு 345/5

கமழும் தாழை கானல் அம் பெரும் துறை - பதி 55/5

வாடை தூக்க வணங்கிய தாழை/ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை - கலி  128/2,3

தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை/வீழ் ஊசல் தூங்க பெறின் - கலி  131/10,11

நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை/பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள் - கலி  133/4,5

முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம் - கலி 136/9

நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் - கலி 144/27

தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி - அகம் 20/6

தாழை தளர தூக்கி மாலை - அகம் 40/6

தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை - அகம் 90/3

பேஎய் தலைய பிணர் அரை தாழை/எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் - அகம் 130/5,6

தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ - அகம் 180/12

எக்கர் தாழை மடல்-வயினானும் - அகம் 330/13

முன்றில் தாழை தூங்கும் - அகம் 340/23

தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் - அகம் 353/19

தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் - அகம் 380/6

குலை இறைஞ்சிய கோள் தாழை/அகல் வயல் மலை வேலி - புறம் 17/9,10

ஓங்கு மணல் குலவு தாழை/தீம் நீரோடு உடன் விராஅய் - புறம் 24/14,15

முன்றில் தாழையொடு கமழும் - நற் 49/9

கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ - ஐந்50:49/1

முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே - திணை150:36/1

தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் - திணை150:44/3

தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல் - திணை150:45/1

தாழை துவளும் தரங்க நீர் சேர்ப்பிற்றே - திணை150:59/3

மிண்டல் அம் தண் தாழை இணைந்து - திணை150:61/4

நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப - பழ:361/3

தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை - கைந்:59/1

இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த - திணை150:58/3

அயின்று எழும் விரை வாய் தாழை அலர் மடல் பள்ளி பல் நாள் - தேம்பா:19 11/1

விரை வாய் பூம் தாழை முகைகள் விண்ட வெறி விம்மும் - தேம்பா:29 18/1

விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற - தேம்பா:32 23/1

தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே - தேவா-சம்:714/4

மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் - தேவா-சம்:1839/3

தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே - தேவா-சம்:1877/4

மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்து - தேவா-சம்:1909/3

மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று - தேவா-சம்:1985/2

தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் - தேவா-சம்:2456/2

தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில் - தேவா-சம்:2957/2

தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி - தேவா-சம்:3559/3

தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே - தேவா-சம்:3605/4

மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் - தேவா-சம்:3633/3

இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் - தேவா-சம்:3881/3

பூக்கும் தாழை புறணி அருகு எலாம் - தேவா-அப்:1155/1

பூக்கும் தாழை புறணி அருகு எலாம் - தேவா-அப்:1168/1

தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் - தேவா-அப்:1480/3

தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து - தேவா-சுந்:719/3

தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல் - தேவா-சுந்:720/3

தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள் - தேவா-சுந்:779/3

இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் - தேவா-சம்:2900/3

அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை - தேவா-சம்:4079/3

தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம் பதியே - தேவா-சம்:1464/4

தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ - திருவா:15 13/4

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய் - நாலாயி:220/1

தாழை மடல் ஊடு உரிஞ்சி தவள வண்ண பொடி அணிந்து - நாலாயி:407/3

மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் - நாலாயி:1673/1

கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3337/3

தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை தம்பிரானே - திருப்:80/16

பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம் - சீறா:3124/2

வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை
தொடுத்து பந்தரில் துயல்வர தூக்கிய தோற்றம் - சீறா:3128/1,2

தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் - சீறா:4130/3

தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் - சீறா:1004/4

எக்கர் தாழை நீர் துறை தாழ்ந்த - உஞ்ஞை:40/112

முட தாள் தாழை மொய்த்து எழு முழு சிறை - உஞ்ஞை:49/25

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு - புகார்:2/17

கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் - புகார்: 6/166,167

வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு - புகார்:6/175

முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு - புகார்:8/49

வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் - மது:22/68

குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து - வஞ்சி:27/237

கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த - மணி:4/17

தாழை தண்டின் உணங்கல் காணாய் - மணி:20/62

இளமையில் வாழைத்தண்டு போன்று இருக்கும் மகளிர் குறங்கு(மால்-தொடை) முதுமையில் தாழை மரத்துத் தண்டு போல மாறிவிடுமாம்

பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் - மணி: 3/163,164

முட கால் புன்னையும் மடல் பூம் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் - மணி: 8/9,10

வாச தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே - சிந்தா:1 68/4

தந்தியாம் உரைப்பின் தாழை தட மலர் வணிகன் நாறும் - சிந்தா:5 1287/3

முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும் - சிந்தா:12 2558/1

குருகு பொறை உயிர்க்கும் கொடு முள் தாழை வெண் தோட்டு - சிந்தா:12 2559/2

தரும் கனி பலவொடு தாழை இன் கனி - பால:5 40/3

மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் - யுத்1:4 28/2

துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலை பதடி ஆயினேன் - அயோ:11 129/1,2

மாங்கனி தாழையின் காய் வாழையின் கனிகளோடும் - ஆரண்-மிகை:16 1/1

தடறு தாங்கிய கூன் இளம் தாழையின்
மிடறு தாங்கும் விருப்பு உடை தீம் கனி - கிட்:15 47/2,3

தாறு நாறுவ வாழைகள் தாழையின்
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி - கிட்-மிகை:15 2/1,2

வாழை முழுமுதல் துமிய தாழை
இளநீர் விழு குலை உதிர தாக்கி - திரு 307,308

5. பயன்பாடு

தாழையாம் பூ முடிச்சு 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.