Skip to content
வியன்

வியன் என்பதன் பொருள்பெருமை, அகலம், பரப்பு,  மிகுதி.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. பெருமை, 2. அகலம், பரப்பு,  3. மிகுதி.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

greatness, width, wide , extension, abundance

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/4,5

ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு

விரி கடல் வியன் தானையொடு – மது 180

விரிந்த கடலைப் போன்ற அகற்சியையுடைய படையுடன்

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி - சிறு 170

கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் - பெரும் 41

வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் - பெரும் 82

புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து - பெரும் 184

பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி - பெரும் 233

ஓங்கு திரை வியன் பரப்பின் - மது 1

மலை நாறிய வியன் ஞாலத்து - மது 4

அமர் கடக்கும் வியன் தானை - மது 39

புலவு நீர் வியன் பௌவத்து - மது 113

வியன் மேவல் விழு செல்வத்து - மது 120

விரி கடல் வியன் தானையொடு - மது 180

வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி - மது 190

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா - நெடு 27

வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து - நெடு 129

விளைவு அறா வியன் கழனி - பட் 8

வேலாழி வியன் தெருவில் - பட் 119

பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து - மலை 99

விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே - மலை 351

செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம் - நற் 57/8

ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி - நற் 98/3

குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ - நற் 204/2

இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் - நற் 257/4

விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர - நற் 306/7

சிறுதினை வியன் புனம் காப்பின் - நற் 351/8

எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை - குறு 53/5

கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து - குறு 162/1

தகை முற்றினவே தண் கார் வியன் புனம் - குறு 188/2

ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை - குறு 277/1

சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து - குறு 375/3

வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின் - ஐங் 306/1

கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை - பதி 17/5

புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி - பதி 21/21

சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் - பதி 28/11

ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு - பதி 31/14

வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து - பதி 31/30

மூழ்த்து இறுத்த வியன் தானையொடு - பதி 33/5

நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து - பதி 35/4

எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை - பதி 39/5

நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த - பதி 40/26

வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் - பதி 41/13

எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்கண் - பதி 41/23

புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி - பதி 62/13

விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள - பரி 13/5

மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி 16/36

இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே - கலி 8/23

மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் - கலி 33/30

இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் - கலி 83/3

தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப - கலி 93/2

வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து - கலி 93/30

மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து - கலி 100/5

இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என - கலி 100/21

பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் - கலி 106/5

விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் - கலி 106/19

கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து - கலி 109/1

குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை - கலி 130/19

முல்லை வியன் புலம் பரப்பி கோவலர் - அகம் 14/7

என்றூழ் வியன் குளம் நிறைய வீசி - அகம் 42/9

நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும் - அகம் 47/12

நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு - அகம் 52/9

வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் - அகம் 83/10

வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன் - அகம் 98/19

உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை - அகம் 103/8

ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே - அகம் 116/19

வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை - அகம் 135/11

நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு - அகம் 145/5

விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் - அகம் 164/3

இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து - அகம் 174/1

துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு - அகம் 179/3

வெறி அயர் வியன் களம் கடுக்கும் - அகம் 182/17

வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை - அகம் 204/3

பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து - அகம் 213/13

சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி - அகம் 219/1

அரும் கடி வியன் நகர் நோக்கி - அகம் 224/17

பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம் - அகம் 242/5

வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி - அகம் 242/11

வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு - அகம் 263/5

ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை - அகம் 321/6

இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து - அகம் 334/13

வெம் அறை மருங்கின் வியன் சுரம் - அகம் 361/15

வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை - அகம் 364/10

நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து - அகம் 366/2

தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம் - அகம் 368/1

வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த - அகம் 372/4

அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய - அகம் 382/6

முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் - அகம் 397/3

விலங்கு அகன்ற வியன் மார்ப - புறம் 3/16

யூபம் நட்ட வியன் களம் பல-கொல் - புறம் 15/21

நிலவு மணல் வியன் கானல் - புறம் 17/11

பரந்துபட்ட வியன் ஞாலம் - புறம் 18/2

வியன் ஞாலத்து அகலமும் - புறம் 20/2

வியன் பாசறை காப்பாள - புறம் 22/25

ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை - புறம் 23/15

கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை - புறம் 35/19

வியன் தானை விறல் வேந்தே - புறம் 38/4

புலி துஞ்சு வியன் புலத்து அற்றே - புறம் 54/13

நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை - புறம் 55/21

தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் - புறம் 61/9

இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை - புறம் 62/11

கொளகொள குறைபடா கூழ் உடை வியன் நகர் - புறம் 70/7

கடி உடை வியன் நகரவ்வே அவ்வே - புறம் 95/3

கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக - புறம் 105/5

கிளி மரீஇய வியன் புனத்து - புறம் 138/9

ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி - புறம் 211/16

முள் உடை வியன் காட்டதுவே நன்றும் - புறம் 225/8

முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர் - புறம் 247/8

கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த - புறம் 272/4

வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு - புறம் 339/1

இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து - புறம் 368/12

வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி - புறம் 370/19

பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் - புறம் 373/27

கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் - புறம் 374/1

நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய - புறம் 382/17

அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி - புறம் 383/7

விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து - புறம் 390/4

கனவினும் குறுகா கடி உடை வியன் நகர் - புறம் 390/6

வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு - திணை50:18/2

வீயும் வியன் புறவின் வீழ் துளியான் மா கடுக்கை - திணை150:98/1

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து - குறள்:2 3/1

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் - குறள்:2 9/1

ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம் - குறள்:72 6/1

விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து - பழ:1/2

வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது - பழ:124/3

பார்க்க : வியல்
வியன்
வியன் Photo by Sharad Bhat from Pexels

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *