கொன்றை என்பது சரக்கொன்றை மரம்.
1. சொல் பொருள்
ஒரு மரம், சித்திரைப் பூ, சுவர்ண புஷ்பம்; இதழி, கடுக்கை, பெருங்கொன்றை,சிறுகொன்றை, பொற்சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன், கொன்னை, பிரணவ மரம்; பொன்னிறத்தில் பூக்கக்கூடியது.
2. சொல் பொருள் விளக்கம்
கொன்றை கேரளாவின் மாநில மலராகும். இதன் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது முல்லை நிலத்திற்குரிய பூவாகவும் கருதப்பட்டது. இது தாய்லாந்தின் நாட்டின் தேசியப் பூ மற்றும் மரமாகும்.
சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.
இம்மரத்தின் தாயகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்படும் வட்டாரப் பெயர்கள்
- அரபு: கியார் சாம்பார் (خيار شمبر)
- அசாம்: சொனாரு (সোণাৰু)
- வங்காளம்: சொனாலு (সোনালূু), சொனால் (সোনাল), பண்டார் லத்தி (বাঁদরলাঠি বা বান্দর লাঠি), அமல்தாஸ்
- பர்மியம்: ஙூ வா (ငုရွှေဝါပင်)
- சீனம்: ஆ போ லே
- குசராத்தி: கர்மாலோ (ગરમાળો)
- இந்தி: amaltās (अमलतास), பெந்த்ரா லத்தி
- இந்தோனேசியம்: தெங்குலி
- நிப்பான்: நண்பான் சைக்காச்சி (ナンバン サイカチ, கஞ்சி: 南蛮皀莢)
- சாவகம்: திரெங்குலி (ꦠꦽꦁꦒꦸꦭꦶ)
- கெமர்: ரீச்சபுரூக் (រាជព្រឹក្ស)
- கன்னடம்: கக்கே (ಕಕ್ಕೆ ಮರ)
- மலையாளம்: கனிக்கொன்னா (കണിക്കൊന്ന); കണിക്കൊന്ന, ഓഫീർപ്പൊന്ന്, കൊന്നപ്പൂവ്, കർണ്ണികാരം
- சிங்களம்: எகெல (ඇහැල) (or ahalla), ehela
- தெலுங்கு: ரெயீலா (రేల)
- உருது: அமல்தாஸ் (املتاس)
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Cassia fistula, Indian laburnum, golden rain tree, cana fistula
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பொன் என கொன்றை மலர – நற் 242/3 பூக்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிக்கொண்டிருக்கும். ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86 (தூங்கு = தொங்கு, இணர் = பூங்கொத்து) இதன் காய் நீளமாக உள்ளே துளையுள்ளது புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் – நற் 296/4 காயில் துளையிட்டுப் புல்லாங்குழலாய் இசைப்பர். கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10 இதன் மொட்டுக்கள் அந்தக் காலத்துப் பொற்காசுகளைப் போன்றிருக்கும்
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3 பொன் கொன்றை மணி காயா - பொரு 201 கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல் - பெரும் 328 முறி இணர் கொன்றை நன் பொன் கால - முல் 94 சுடர் பூ கொன்றை தாஅய நீழல் - மது 277 ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை/அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை - குறி 86,87 அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி - நற் 46/6 பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை/நீடிய சடையோடு ஆடா மேனி - நற் 141/3,4 கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க - நற் 221/4 பொன் என கொன்றை மலர மணி என - நற் 242/3 புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் - நற் 296/4 நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை/காடு கவின் பூத்து ஆயினும் நன்றும் - நற் 302/2,3 கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப - நற் 364/10 காயாம் குன்றத்து கொன்றை போல - நற் 371/1 கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை/கானம் கார் என கூறினும் - குறு 21/3,4 மடவ மன்ற தடவு நிலை கொன்றை/கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய - குறு 66/1,2 காசின் அன்ன போது ஈன் கொன்றை/குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும் - குறு 148/3,4 சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ - குறு 183/1 கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர் - குறு 233/2 காயா கொன்றை நெய்தல் முல்லை - ஐங் 412/1 பொன் என மலர்ந்த கொன்றை மணி என - ஐங் 420/1 நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றை/அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் - ஐங் 430/1,2 சுடு பொன் அன்ன கொன்றை சூடி - ஐங் 432/2 துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன - ஐங் 458/1 பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி - ஐங் 462/2 குறும் பல் கோதை கொன்றை மலர - ஐங் 497/1 கொன்றை பூவின் பசந்த உண்கண் - ஐங் 500/1 நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர் - பதி 67/13 கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர் - பரி 8/24 கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள - கலி 1/11 ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர் - கலி 106/3 அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான் - கலி 150/1 கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் - அகம் 0/1 பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ - அகம் 4/2 கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி - அகம் 15/15 கொன்றை அம் குழலர் பின்றை தூங்க - அகம் 54/11 சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று - அகம் 115/11 ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் - அகம் 197/16 நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் - அகம் 364/5 மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை/ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய - அகம் 398/3,4 கண்ணி கார் நறும் கொன்றை காமர் - புறம் 1/1 வண்ண மார்பின் தாரும் கொன்றை/ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த - புறம் 1/2,3 மாண் மலர் கொன்றையவன்/தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே - கலி 142/28,29 பிடவமும் கொன்றையும் கோடலும் - நற் 99/9 பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே - ஐங் 435/3 நாள்மலர் கொன்றை பொலம் தார் போன்றன - பரி 14/10 வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும்/அன்னவை பிறவும் பன் மலர் துதைய - கலி 102/3,4 மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும் - கலி 103/1 பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ - நற் 246/8 கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே - ஐங் 436/3
தாது இணர் கொன்றை எரி வளர்ப்ப பாஅய் - ஐந்70:18/2
கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து - ஐந்70:22/1
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல் - திணை150:109/2
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை
போலும் இழையார் சொல் தேறான் களியானேல் - ஏலாதி:5/2,3
கொன்றை கொடும் குழல் ஊதிய கோவலர் - கைந்:30/1
தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம் - திருவா:5 12/3 விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே - திருவா:6 29/2,3 சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி - திருவா:7 14/5 தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர் - திருவா:8 16/4 சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள் - திருவா:8 17/1 தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் - திருவா:9 17/1 வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி - திருவா:9 19/1 தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் - திருவா:13 5/1 நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ - திருவா:13 13/3,4 தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள் - திருவா:16 6/2 கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி - திருவா:16 9/5 கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும் - திருவா:17 10/1 தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் - திருவா:34 10/3 முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி - திருவா:35 7/3 பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் - திருவா:43 8/1 மண் மகிழ்ந்த அரவம் மலர் கொன்றை மலிந்த வரை மார்பில் - தேவா-சம்:4/3 வண்டு அமரும் மலர் கொன்றை மாலை வார் சடையான் கழல வாழ்த்துவோமே - தேவா-சம்:53/4 அரவத்தொடும் இள வெண் பிறை விரவும் மலர் கொன்றை நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே - தேவா-சம்:147/3,4 கறை ஆர் மிடறு உடையான் கமழ் கொன்றை சடைமுடி மேல் - தேவா-சம்:165/1 நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் - தேவா-சம்:186/3 பூண்ட வரை மார்பில் புரி_நூலன் விரி கொன்றை ஈண்ட அதனோடு ஒரு பால் அம் மதி அதனை - தேவா-சம்:188/1,2 கடி கொள் கொன்றை கலந்த சென்னியான் - தேவா-சம்:244/2 பூ ஆர் கொன்றை புரி புன் சடை ஈசா - தேவா-சம்:250/1 கொங்கு செருந்தி கொன்றை மலர் கூட - தேவா-சம்:255/1 தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் - தேவா-சம்:274/2 வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில் - தேவா-சம்:330/1 மாடு ஆர் மலர் கொன்றை வளர் சடை வைத்து - தேவா-சம்:333/1 வரிது ஆகிய வண்டு அறை கொன்றை விரி தார் பொழில் வீழிமிழலை - தேவா-சம்:375/2,3 மதி ஒன்றிய கொன்றை வடத்தன் - தேவா-சம்:383/1 பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண் நூல் கிடந்த - தேவா-சம்:419/1 வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே - தேவா-சம்:420/4 தார் இடு கொன்றை ஒர் வெண் மதி கங்கை தாழ் சடை மேல் அவை சூடி - தேவா-சம்:429/1 கன மலர் கொன்றை அலங்கல் இலங்க காதில் ஒர் வெண் குழையோடு - தேவா-சம்:430/1 பைம் மா நாகம் பல் மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு - தேவா-சம்:448/1 செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி - தேவா-சம்:450/1 கன மலர் கொன்றை அலங்கல் இலங்க கனல் தரு தூ மதி கண்ணி - தேவா-சம்:473/1 பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை வெண் நூல் புனை கொன்றை கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய குழகர்-கொல் ஆம் இவர் என்ன - தேவா-சம்:476/1,2 கந்தம் கமழ் கொன்றை கண்ணி சூடி கனல் ஆடி - தேவா-சம்:483/1 வண்டு மருள் பாட வளர் பொன் விரி கொன்றை விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே - தேவா-சம்:493/3,4 சுரும்பு உண் விரி கொன்றை சுடர் பொன் சடை தாழ - தேவா-சம்:494/3 மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி - தேவா-சம்:529/2 நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே - தேவா-சம்:530/3,4 மூசு வண்டு ஆர் கொன்றை சூடி மும்மதிலும் உடனே - தேவா-சம்:535/3 வன்னி கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை - தேவா-சம்:547/1 கங்கையோடு திங்கள் சூடி கடி கமழும் கொன்றை தொங்கலானே தூய நீற்றாய் சோபுரம் மேயவனே - தேவா-சம்:548/3,4 நாற்றம் மிக்க கொன்றை துன்று செம் சடை மேல் மதியம் - தேவா-சம்:552/1 பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை-கொல் ஆம் - தேவா-சம்:553/2 தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை - தேவா-சம்:586/1 அரும்பு கொன்றை அடிகளை - தேவா-சம்:590/2 கார் ஆர் கொன்றை கலந்த முடியினர் - தேவா-சம்:601/1 போது பொன் திகழ் கொன்றை புனை முடி - தேவா-சம்:606/1 பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன் சடையினான் உறையும் - தேவா-சம்:636/3 பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர் - தேவா-சம்:640/3 கொன்றை வார் சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே - தேவா-சம்:651/4 கொன்றை மலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே - தேவா-சம்:669/4 நிழலால் மலிந்த கொன்றை சூடி நீறு மெய் பூசி நல்ல - தேவா-சம்:687/1 கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி காதில் ஓர் வார் குழையன் - தேவா-சம்:693/1 தார் ஆர் கொன்றை பொன் தயங்க சாத்திய மார்பு அகலம் - தேவா-சம்:704/1 கடி ஆர் கொன்றை சுரும்பின் மாலை கமழ் புன் சடையார் விண் - தேவா-சம்:730/1 கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறை சேர் கண்டத்தர் - தேவா-சம்:733/2 தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை - தேவா-சம்:738/1 நீறு ஆர் அகலம் உடையார் நிரை ஆர் கொன்றை அரவோடும் - தேவா-சம்:759/1 வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு - தேவா-சம்:760/1,2 கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி குளிர் பொய்கை - தேவா-சம்:766/3 பொன் தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் - தேவா-சம்:768/3 நீண்ட சடையர் நிரை கொள் கொன்றை விரை கொள் மலர் மாலை - தேவா-சம்:770/1 வான் ஆர் சோதி மன்னு சென்னி வன்னி புன கொன்றை தேன் ஆர் போது தான் ஆர் கங்கை திங்களொடு சூடி - தேவா-சம்:787/1,2 ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர - தேவா-சம்:788/2 சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர் கொன்றை மறை ஆர் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார் - தேவா-சம்:789/1,2 தார் கொள் கொன்றை கண்ணியோடும் தண் மதியம் சூடி - தேவா-சம்:791/1 பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசி - தேவா-சம்:793/2 நறவம் நிறை வண்டு அறை தார் கொன்றை நயந்து நயனத்தால் - தேவா-சம்:798/1 கனை ஆர் விடை ஒன்று உடையான் கங்கை திங்கள் கமழ் கொன்றை புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதி ஆக - தேவா-சம்:801/2,3 வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க - தேவா-சம்:812/1 அம் மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே - தேவா-சம்:834/4 கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் - தேவா-சம்:837/2 கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் - தேவா-சம்:843/2 கார் கொண்ட கடி கமழ் விரி மலர் கொன்றை கண்ணியர் வளர் மதி கதிர்விட கங்கை - தேவா-சம்:846/1 தேம் கமழ் கொன்றை அம் திரு மலர் புனைவார் திகழ்தரு சடை மிசை திங்களும் சூடி - தேவா-சம்:849/1 கந்தம் கமழ் கொன்றை கமழ் புன் சடை வைத்த - தேவா-சம்:896/3 புனையும் விரி கொன்றை கடவுள் புனல் பாய - தேவா-சம்:904/1 குளிரும் மதி சூடி கொன்றை சடை தாழ - தேவா-சம்:918/1 பூசும் சுடு நீறு புனைந்தான் விரி கொன்றை ஈசன் என உள்கி எழுவார் வினைகட்கு - தேவா-சம்:920/2,3 கொங்கு ஆர் நறும் கொன்றை சூடி குழகு ஆக - தேவா-சம்:921/2 சந்த மலர் கொன்றை சடை மேல் உடையானை - தேவா-சம்:958/2 விரை ஆர்தரு கொன்றை உடையான் விடை ஏறி - தேவா-சம்:962/2 அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் - தேவா-சம்:1069/3,4 கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய் - தேவா-சம்:1070/3 நீடு அலர் சோதி வெண் பிறையோடு நிரை கொன்றை சூடலன் அந்தி சுடர் எரி ஏந்தி சுடுகானில் - தேவா-சம்:1080/1,2 நீர் இடம் கொண்ட நிமிர் சடை-தன் மேல் நிரை கொன்றை சீர் இடம் கொண்ட எம் இறை போலும் சேய்து ஆய - தேவா-சம்:1082/1,2 நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே - தேவா-சம்:1083/4 பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரி சடை - தேவா-சம்:1084/1 வெறி ஆர் கொன்றை சடையா விடையா என்பாரை - தேவா-சம்:1107/3 பூண வல்லான் புரி சடை மேல் ஒர் புனல் கொன்றை பேண வல்லான் பெண் மகள்-தன்னை ஒருபாகம் - தேவா-சம்:1113/2,3 தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் - தேவா-சம்:1114/1,2 துணையல் செய்தான் தூய வண்டு யாழ் செய் சுடர் கொன்றை பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம் - தேவா-சம்:1115/1,2 மெய் உடையான் வெண் பிறை சூடி விரி கொன்றை மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த - தேவா-சம்:1116/2,3 வெள்ளம் எல்லாம் விரி சடை மேல் ஓர் விரி கொன்றை கொள்ள வல்லான் குரை கழல் ஏத்தும் சிறு தொண்டர் - தேவா-சம்:1117/1,2 ஆடல் அரவு அசைத்தான் அரு மா மறைதான் விரித்தான் கொன்றை சூடிய செஞ்சடையான் சுடுகாடு அமர்ந்த பிரான் - தேவா-சம்:1122/1,2 சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம் - தேவா-சம்:1126/1 பைம் தளிர் கொன்றை அம் தார் பரமன் அடி பரவ பாவம் - தேவா-சம்:1136/3 மத்த நல் மா மலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று - தேவா-சம்:1159/1 தேய்பிறையும் அரவும் பொலி கொன்றை சடை-தன் மேல் சேர - தேவா-சம்:1167/3 கண் அமர் நெற்றியினான் கமழ் கொன்றை சடை-தன் மேல் நன்றும் - தேவா-சம்:1168/1 வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் - தேவா-சம்:1169/2 பனி மலர் கொன்றை அம் படர் சடையன் - தேவா-சம்:1191/2 கொய் அணி நறு மலர் கொன்றை அம் தார் - தேவா-சம்:1199/1 பூ கமழ் கொன்றை புரி சடையீர் அடி போற்றுகின்றோம் - தேவா-சம்:1257/3 கொங்கு அணி நறும் கொன்றை தொங்கலன் குளிர் சடையான் - தேவா-சம்:1274/1 கார் கெழு நறும் கொன்றை கடவுளது இடம் வகையால் - தேவா-சம்:1276/3 நறை பெற்ற விரி கொன்றை தார் நயந்த - தேவா-சம்:1285/2 நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் - தேவா-சம்:1398/1,2 பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் - தேவா-சம்:1399/2 தோடு அணி மலர் கொன்றை சேர் சடை தூ மதியம் புனைந்து - தேவா-சம்:1431/1 கந்தம் ஆம் மலர் கொன்றை கமழ் சடை - தேவா-சம்:1449/1 காருற நின்று அலரும் மலர் கொன்றை அம் கண்ணியர் கடு விடை கொடி வெடி கொள் காடு உறை பதியர் - தேவா-சம்:1462/2 தூ மரு செம் சடையில் துதை வெண் மதி துன்று கொன்றை தொல் புனல் சிரம் கரந்து உரித்த தோல் உடையர் - தேவா-சம்:1465/2 தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கு இடம் தடங்கல் இடும் திரை தருமபுரம் பதியே - தேவா-சம்:1467/4 வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் - தேவா-சம்:1536/1 அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே - தேவா-சம்:1558/4 நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் - தேவா-சம்:1591/1 நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் - தேவா-சம்:1598/1 காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி - தேவா-சம்:1605/1 நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை தாரானை தையல் ஓர்பாகம் உடையானை - தேவா-சம்:1616/1,2 நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் - தேவா-சம்:1623/1,2 பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல் - தேவா-சம்:1667/1 வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி - தேவா-சம்:1671/1 கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி - தேவா-சம்:1732/2 காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு - தேவா-சம்:1747/1 அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் - தேவா-சம்:1754/2 சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே - தேவா-சம்:1790/3,4 வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே - தேவா-சம்:1798/1 ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி - தேவா-சம்:1819/1 கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே - தேவா-சம்:1912/3,4 கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர - தேவா-சம்:1920/1 கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் - தேவா-சம்:1928/1 பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே - தேவா-சம்:1943/1 பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் - தேவா-சம்:1952/1 போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல் - தேவா-சம்:1957/1 பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என - தேவா-சம்:2006/3 காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் - தேவா-சம்:2042/3 கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ - தேவா-சம்:2086/1 கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் - தேவா-சம்:2116/2 பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் - தேவா-சம்:2137/1 குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி - தேவா-சம்:2140/1,2 வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி - தேவா-சம்:2162/1 நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய - தேவா-சம்:2197/2,3 கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் - தேவா-சம்:2204/3 மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் - தேவா-சம்:2292/2 விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய - தேவா-சம்:2307/1 பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் - தேவா-சம்:2340/1 பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர் - தேவா-சம்:2346/1 வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் - தேவா-சம்:2383/2 புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி - தேவா-சம்:2385/3 முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2390/2 நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2391/2 துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2392/2 நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2393/2 வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் - தேவா-சம்:2395/2 கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் - தேவா-சம்:2415/1 மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் - தேவா-சம்:2468/3 பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை - தேவா-சம்:2497/1 புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை - தேவா-சம்:2500/2,3 அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம் - தேவா-சம்:2529/1 கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே - தேவா-சம்:2539/4 விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் - தேவா-சம்:2562/1 எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய - தேவா-சம்:2586/1,2 தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய - தேவா-சம்:2589/1,2 பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர் - தேவா-சம்:2605/3 கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி அதள் ஆர்ப்பர் - தேவா-சம்:2638/2 கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை - தேவா-சம்:2653/3 கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் - தேவா-சம்:2676/1 கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே - தேவா-சம்:2677/1 பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க - தேவா-சம்:2679/2 கொய் அணி மலர் கொன்றை சூடிய - தேவா-சம்:2685/1 தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை - தேவா-சம்:2716/3 வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் - தேவா-சம்:2728/1 நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே - தேவா-சம்:2801/2 குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த - தேவா-சம்:2830/3 புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து - தேவா-சம்:2836/3 கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2860/1 கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2866/1 புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே - தேவா-சம்:2879/2 கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் - தேவா-சம்:2887/3 தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு - தேவா-சம்:2912/3 கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் - தேவா-சம்:2915/2 புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே - தேவா-சம்:2917/4 தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே - தேவா-சம்:2951/4 நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் - தேவா-சம்:3091/3 நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல் - தேவா-சம்:3122/3 வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி - தேவா-சம்:3142/2 வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு - தேவா-சம்:3160/1 விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம் - தேவா-சம்:3162/2 கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:3183/1 கொன்றை சூடி நின்ற தேவை - தேவா-சம்:3223/1 தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் - தேவா-சம்:3256/2 விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான் - தேவா-சம்:3281/2,3 வன்னி கொன்றை மதியொடு கூவிளம் - தேவா-சம்:3287/1 கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3355/3 கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் - தேவா-சம்:3365/3 அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் - தேவா-சம்:3408/1 திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் - தேவா-சம்:3416/1 ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே - தேவா-சம்:3436/4 புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் - தேவா-சம்:3498/1 வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் - தேவா-சம்:3503/1 துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ - தேவா-சம்:3532/3 கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே - தேவா-சம்:3573/3 காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் - தேவா-சம்:3582/3 கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் - தேவா-சம்:3593/1 மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல - தேவா-சம்:3619/1 போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் - தேவா-சம்:3637/1 தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் - தேவா-சம்:3657/2 மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் - தேவா-சம்:3667/1 வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து - தேவா-சம்:3670/1 கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி - தேவா-சம்:3679/1 ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் - தேவா-சம்:3692/3 சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் - தேவா-சம்:3770/2 பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் - தேவா-சம்:3788/3 போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே - தேவா-சம்:3882/4 காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே - தேவா-சம்:3885/4 பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை - தேவா-சம்:3895/1,2 விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி - தேவா-சம்:3946/1,2 தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே - தேவா-சம்:4014/3 பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே - தேவா-சம்:4036/1 துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே - தேவா-சம்:4046/1 மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல் - தேவா-சம்:4068/1 தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் - தேவா-சம்:4070/2 புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை - தேவா-சம்:4073/1,2 மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை - தேவா-சம்:4093/3 பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள - தேவா-சம்:4105/1 நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம் - தேவா-சம்:4141/2,3 வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் - தேவா-அப்:53/1 சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் - தேவா-அப்:55/2 தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் - தேவா-அப்:60/3 நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் - தேவா-அப்:78/1 மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் - தேவா-அப்:81/3 தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ - தேவா-அப்:119/4 வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த - தேவா-அப்:125/3 மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் - தேவா-அப்:164/3 பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை மாலையும் கண்ணியும் ஆவன சேவடி - தேவா-அப்:173/1,2 கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன - தேவா-அப்:195/1 வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து - தேவா-அப்:240/2 மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே - தேவா-அப்:242/3,4 மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே - தேவா-அப்:245/3,4 கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு - தேவா-அப்:250/2,3 சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் - தேவா-அப்:281/1,2 கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் - தேவா-அப்:291/1 சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து - தேவா-அப்:326/3 கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு - தேவா-அப்:346/1 முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து - தேவா-அப்:349/2 பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் - தேவா-அப்:352/1 நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் - தேவா-அப்:381/2 மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி - தேவா-அப்:431/2 பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் - தேவா-அப்:442/1 மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே - தேவா-அப்:466/4 வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை - தேவா-அப்:585/2 கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா - தேவா-அப்:610/2 பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் - தேவா-அப்:623/3 பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை - தேவா-அப்:634/2 கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை - தேவா-அப்:634/3 அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் - தேவா-அப்:701/1 கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே - தேவா-அப்:704/3,4 குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே - தேவா-அப்:744/4 பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் - தேவா-அப்:804/3 அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் - தேவா-அப்:824/2 கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் - தேவா-அப்:857/1 பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து - தேவா-அப்:858/1 தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் - தேவா-அப்:861/1 கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி - தேவா-அப்:866/3 தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் - தேவா-அப்:923/2 வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் - தேவா-அப்:932/3 நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே - தேவா-அப்:950/2 குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி - தேவா-அப்:952/2 நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே - தேவா-அப்:954/4 தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் - தேவா-அப்:1005/3 நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் - தேவா-அப்:1036/2 காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் - தேவா-அப்:1043/2,3 வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு - தேவா-அப்:1044/1 கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே - தேவா-அப்:1045/3,4 குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை - தேவா-அப்:1047/3 நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே - தேவா-அப்:1064/4 வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் - தேவா-அப்:1068/1 கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை - தேவா-அப்:1090/1 நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன் - தேவா-அப்:1190/2,3 கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும் - தேவா-அப்:1207/1 இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் - தேவா-அப்:1243/1 புனையும் பொன் நிற கொன்றை புரி சடை - தேவா-அப்:1258/2 கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே - தேவா-அப்:1457/4 கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் - தேவா-அப்:1484/1 கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே - தேவா-அப்:1523/4 கீதனை கிளரும் நறும் கொன்றை அம் - தேவா-அப்:1683/2 கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை - தேவா-அப்:1750/3 வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை - தேவா-அப்:1838/1 கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான் - தேவா-அப்:1975/1 விடலையானை விரை கமழ் தேன் கொன்றை படலையானை பலி திரிவான் செலும் - தேவா-அப்:1997/1,2 இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும் - தேவா-அப்:2045/1 கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட - தேவா-அப்:2100/1 குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி - தேவா-அப்:2103/1 வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை - தேவா-அப்:2113/3 இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே - தேவா-அப்:2117/4 வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும் - தேவா-அப்:2121/2 கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே - தேவா-அப்:2162/4 புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் - தேவா-அப்:2165/3 பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே - தேவா-அப்:2221/4 பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார் - தேவா-அப்:2223/1 தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த - தேவா-அப்:2224/1 பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர் - தேவா-அப்:2231/1 கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும் - தேவா-அப்:2245/1 கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும் - தேவா-அப்:2249/3 பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும் - தேவா-அப்:2252/1 கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் - தேவா-அப்:2253/1 கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த - தேவா-அப்:2259/1 கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும் - தேவா-அப்:2264/2 கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே - தேவா-அப்:2290/3,4 பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை - தேவா-அப்:2292/1 மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம் - தேவா-அப்:2295/3 கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் - தேவா-அப்:2299/3 கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும் - தேவா-அப்:2304/1 மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே - தேவா-அப்:2325/4 தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே - தேவா-அப்:2328/4 இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் - தேவா-அப்:2335/2 பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண் - தேவா-அப்:2336/1 வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட - தேவா-அப்:2385/2 கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி - தேவா-அப்:2386/2 பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண் - தேவா-அப்:2392/1 கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி - தேவா-அப்:2406/2 வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி - தேவா-அப்:2411/1 தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி - தேவா-அப்:2440/1 கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த - தேவா-அப்:2443/3 வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே - தேவா-அப்:2473/2 நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் - தேவா-அப்:2480/2 பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய் - தேவா-அப்:2483/1 இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும் - தேவா-அப்:2506/3 புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே - தேவா-அப்:2515/4 வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை - தேவா-அப்:2516/1 கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை - தேவா-அப்:2552/2 வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண் - தேவா-அப்:2610/2 கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண் - தேவா-அப்:2614/3 கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே - தேவா-அப்:2669/2 வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் - தேவா-அப்:2676/3 மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி - தேவா-அப்:2682/1 பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் - தேவா-அப்:2685/1 கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான - தேவா-அப்:2718/1,2 சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட - தேவா-அப்:2721/2 பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி - தேவா-அப்:2732/2 கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் - தேவா-அப்:2737/2,3 வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண் - தேவா-அப்:2743/3 சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை - தேவா-அப்:2761/1 தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை - தேவா-அப்:2776/2 விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய் - தேவா-அப்:2816/1 நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே - தேவா-அப்:2824/4 கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே - தேவா-அப்:2837/4 விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும் - தேவா-அப்:2840/2 பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு - தேவா-அப்:2842/3 வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண் - தேவா-அப்:2846/1 கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன் - தேவா-அப்:2850/3 நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே - தேவா-அப்:2863/1 சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம் - தேவா-அப்:2877/3 கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய் - தேவா-அப்:2895/1 கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும் - தேவா-அப்:2902/1 நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே - தேவா-அப்:2911/1 கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி - தேவா-அப்:2921/1 குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை - தேவா-அப்:2974/2 ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை - தேவா-அப்:2978/1 குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ - தேவா-அப்:2991/3 தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி - தேவா-அப்:3003/1 கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ - தேவா-அப்:3038/3 அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன் - தேவா-அப்:3042/1 சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே - தேவா-அப்:3046/4 கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று - தேவா-அப்:3064/3 வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த - தேவா-சுந்:47/1,2 குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் - தேவா-சுந்:59/1 அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் - தேவா-சுந்:69/3 வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு - தேவா-சுந்:189/1 மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே - தேவா-சுந்:239/2 சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே - தேவா-சுந்:293/2 ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர் - தேவா-சுந்:367/1 மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் - தேவா-சுந்:368/1 மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா - தேவா-சுந்:415/2 கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் - தேவா-சுந்:422/2 தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய் - தேவா-சுந்:430/1 நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே - தேவா-சுந்:431/2 கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே - தேவா-சுந்:433/1 தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் - தேவா-சுந்:484/1 பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை - தேவா-சுந்:497/3 மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல - தேவா-சுந்:540/1 கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக - தேவா-சுந்:544/1 துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் - தேவா-சுந்:585/2 பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை - தேவா-சுந்:607/3 கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக - தேவா-சுந்:613/2 கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:641/4 அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை - தேவா-சுந்:724/1,2 கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் - தேவா-சுந்:746/3 நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் - தேவா-சுந்:763/1 கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் - தேவா-சுந்:786/1 போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா - தேவா-சுந்:788/1 பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் - தேவா-சுந்:823/2 பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க - தேவா-சுந்:906/1 தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய - தேவா-சுந்:908/2 புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே - தேவா-சுந்:969/2 தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் - தேவா-சுந்:1001/1 முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட - தேவா-சுந்:1029/3 மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை - தேவா-சுந்:1035/1 கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும் - திருக்கோ:24/2 குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய் - திருக்கோ:108/1 கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல் - திருக்கோ:276/3 செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர் - திருக்கோ:391/1 மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார் - திருக்கோ:396/3 கோது குலாவிய கொன்றை குழல் சடை - திருமந்:16/1 தேன் அமர் கொன்றை சிவன் அருள் அல்லது - திருமந்:109/2 தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன் - திருமந்:275/3 கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே - திருமந்:610/4 பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி - திருமந்:1551/1 மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே - திருமந்:2950/4 திரு கொன்றை வைத்த செழும் சடையானே - திருமந்:3042/4 வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் - 1.திருமலை:5 94/1 கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் - 1.திருமலை:5 110/4 கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் - 1.திருமலை:5 190/3 கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே - 2.தில்லை:3 6/2 தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில் - 3.இலை:1 57/1 தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை - 3.இலை:3 71/2 நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் - 3.இலை:4 33/4 செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் - 3.இலை:7 20/4 மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் - 3.இலை:7 36/3 பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப - 4.மும்மை:1 33/4 தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் - 4.மும்மை:5 8/2 துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் - 4.மும்மை:6 56/4 கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே - 5.திருநின்ற:1 208/2 முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் - 5.திருநின்ற:1 217/2 கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி - 5.திருநின்ற:1 295/2 கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும் - 5.திருநின்ற:1 414/3 கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை - 5.திருநின்ற:4 48/3 கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் - 5.திருநின்ற:5 41/3 முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி - 5.திருநின்ற:7 11/3 பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை - 6.வம்பறா:1 107/4 பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு - 6.வம்பறா:1 124/1 மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை - 6.வம்பறா:1 167/2,3 கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி - 6.வம்பறா:1 432/1 கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் - 6.வம்பறா:1 629/4 தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் - 6.வம்பறா:1 728/3 வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் - 6.வம்பறா:1 899/4 காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் - 6.வம்பறா:1 972/3,4 தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் - 6.வம்பறா:1 1143/4 கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை - 6.வம்பறா:2 41/4 வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி - 6.வம்பறா:2 100/1,2 கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம் - 6.வம்பறா:2 104/1 தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ - 6.வம்பறா:2 106/3 தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று - 6.வம்பறா:2 120/2 கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் - 6.வம்பறா:2 135/1 பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி - 6.வம்பறா:2 145/4 முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் - 6.வம்பறா:2 322/3 வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை - 6.வம்பறா:2 361/1 வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து - 6.வம்பறா:2 388/3,4 பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் - 6.வம்பறா:4 15/2 கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை - 7.வார்கொண்ட:1 11/2 கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் - 7.வார்கொண்ட:3 87/1 அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் - 7.வார்கொண்ட:4 79/4 தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி - 7.வார்கொண்ட:5 6/3 வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை - 8.பொய்:5 8/1 வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் - 9.கறை:2 5/1 ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி - 12.மன்னிய:1 9/4 கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் - 12.மன்னிய:1 10/4 விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று - 13.வெள்ளானை:1 46/4 பொருப்பிடை கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு - நாலாயி:349/3 நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும் - நாலாயி:392/3 தாது உலாவு கொன்றை மாலை துன்னு செம் சடை சிவன் - நாலாயி:760/1 கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் - நாலாயி:2060/2 கடி கமழ் கொன்றை சடையனே என்னும் நான்முக கடவுளே என்னும் - நாலாயி:3581/2 பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் - நாலாயி:3618/2 கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே - திருப்:24/6 சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே - திருப்:37/7 திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை - திருப்:74/7 சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக - திருப்:232/7 தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார் - திருப்:295/7 தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர் - திருப்:444/39 கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே - திருப்:537/6 அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே - திருப்:648/7 மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக - திருப்:692/7 வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய - திருப்:734/6 பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி - திருப்:735/5 பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன - திருப்:854/15 ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் - திருப்:855/15 கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே - திருப்:937/5 விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே - திருப்:991/7 கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை - திருப்:1012/13 தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர் - திருப்:1101/6 கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா - திருப்:1145/14 கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா - திருப்:1254/7 கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி - திருப்:1306/2 பூம் பொழில் கொன்றை வேலி முல்லையும் கடந்து போனார் - சீறா:3383/4 வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் - சீறா:1000/3 கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி - சீறா:2054/1 சொரியும் கொன்றையும் தோன்றிட சென்றனர் தூயோர் - சீறா:2678/4 கந்த வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் வைகும் - வில்லி:2 111/3 குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற - வில்லி:7 21/1 தாள் மலர் அன்புற பணிந்து தவம் புரிந்தான் மக பொருட்டால் தரித்த கொன்றை நாள்மலரோன் வெளி நின்று அ நரபதிக்கு நின் குலத்து நரேசர் யார்க்கும் - வில்லி:7 37/2,3 மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை - வில்லி:12 47/2 ஆற்று அறல் பரந்த கொன்றை வார் சடையும் அல்லதை யாவையும் கருதான் - வில்லி:12 65/3 கொன்றை கமழ் முடியோனும் வேணியினை பின்னல் படு குஞ்சி ஆக்கி - வில்லி:12 82/3 குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் - வில்லி:12 85/1 தும்பை வகை மாலை செறி வில்லமொடு கொன்றை மலர் சூதம் அறுகே கமழ்தரும் - வில்லி:12 115/1 சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய் - வில்லி:12 118/2 மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான் - வில்லி:12 122/2 கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை - வில்லி:13 7/3 நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே - வில்லி:41 47/4 கொன்றை கடவேன் என முன் - வில்லி:41 53/3 பங்கு எலாம் மரகதமாம் பவள நிற பொருப்பு உதவு பைம் பொன் கொன்றை தொங்கலால் உனை வளைத்த சூழ்ச்சியை இன்று அறிந்திலனே தோன்றலே நான் - வில்லி:41 142/3,4 துக்கரம் ஆன கொன்றை தொடையலால் வளைத்தவாறும் - வில்லி:41 161/2 கொங்கு அவிழ் செழு மலர் கொன்றை வாசமும் - வில்லி:41 206/3 பொன் தார் கொன்றை நல் தாது நயந்து - மகத:1/195 கொன்றை அம் பசும் காய் பெருக்கியும் பயற்றின் - மகத:15/5 குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி - உஞ்ஞை:51/42 முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும் குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும் - இலாவாண:12/18,19 தடவு நிலை கொன்றையொடு பிடவு தலை பிணங்கிய - உஞ்ஞை:49/116 கொன்றை அம் சடை_முடி மன்ற பொதியிலில் - புகார்:0/40 கொன்றை அம் பூம் குழலாள் - மது:17/44 கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ - மது:17/84 கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - வஞ்சி: 25/17,18 கொன்றையும் துளவமும் குழும தொடுத்த - மது:12/112 குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் - மணி: 3/160,161 கொய் மலர் கொன்றை மாலை குளிர் மதி கண்ணியாற்கு - சிந்தா:1 208/3 குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய் - சிந்தா:5 1196/1 செறிந்த பொன் இதழ் பைம் தார் கொன்றை அம் செல்வற்கு குரவம் - சிந்தா:7 1563/2 சேட்டு இளம் கொன்றை திரு நிழல் துஞ்ச செம் பொறி வண்டு அவற்று அயலே - சிந்தா:10 2104/2 பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும் காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் - சிந்தா:1 154/1,2 கொன்றை பழ குழல் கோவலர் ஆம்பலும் - வளையா:72/3 கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் - பால:2 34/1 பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியை பொருவும் - பால:9 5/3 யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை - பால:12 11/2,3 கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி - அயோ:9 34/2 கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை - ஆரண்:10 94/1 கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் - கிட்:1 32/2 வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து - கிட்:10 29/3 குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை - கிட்:10 33/4 கொன்றை கொடியாய் கொணர்கின்றிலையோ - கிட்:10 57/3 குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் - யுத்3:22 157/3,4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்