கோங்கம் என்பதன் பொருள்ஒரு வகை இலவ மரம்.
1. சொல் பொருள்
ஒரு வகை இலவ மரம், பூ
2. சொல் பொருள் விளக்கம்
கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.
- கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர்
- கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்
- எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும்
- மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்
- கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்
- கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.
- மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.
- கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Cochlospermum gossypium;
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
காட்டில் மரம் நிறையப் பூத்திருக்கும் பல் பூ கோங்கம் அணிந்த காடே – நற் 202/11 எல்லாப் பருவத்திலும் பூக்கும். பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் – பரி 19/79 பூக்கள் அகல விரிந்திருக்கும். குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73 இதன் பூந்தாது பொன் நிறத்தில் இருக்கும். புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12 இது மணம் மிக்கது. மலையிலும் வளரக்கூடியது. தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16 நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம் - தேம்பா:32 11/2 பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள் - திணை150:63/3 தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப - திணை150:65/1 பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் - திணை150:70/2 குருகிலை மருதம் விரி பூ கோங்கம்/போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி - குறி 73,74 கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை - நற் 86/7 பல் பூ கோங்கம் அணிந்த காடே - நற் 202/11 திணி நிலை கோங்கம் பயந்த - ஐங் 343/2 முறி இணர் கோங்கம் பயந்த மாறே - ஐங் 366/5 பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரி 19/79 புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப - கலி 33/12 தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் - கலி 42/16 முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை - அகம் 99/5 ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் - ஆரண்:10 96/2 பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின் - சிந்தா:7 1558/3 குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை - சிந்தா:8 1918/2 பொன் நிற கோங்கம் பொன் பூம் குன்று என பொலிந்த மேனி - சிந்தா:10 2257/1 நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர் - சிந்தா:7 1608/2 குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் - மது:12/84 கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை - வஞ்சி:25/17 குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் - மது:11/207 குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - மது:13/151 கோங்கம் குறுகல் செல்லார் அயல - இலாவாண:12/105 கோங்கம் தட்டம் வாங்கினர் வைத்தும் - இலாவாண:14/24 கோங்கமும் குரவும் கொடி குருக்கத்தியும் - இலாவாண:12/14 நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் - 1.திருமலை:2 28/4 கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை - 6.வம்பறா:1 303/1 குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய் - திருக்கோ:205/1 வளர் பூம் கோங்கம் மாதவியோடு மல்லிகை - தேவா-சம்:1083/1 கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் - தேவா-சம்:1524/1 குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் - தேவா-சம்:2710/3 குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி - தேவா-அப்:824/3 குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி - தேவா-அப்:952/2 கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் - தேவா-அப்:1483/1 மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் - தேவா-சுந்:362/3 கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:3183/1 கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை - தேவா-சம்:3778/1 மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி - தேவா-சுந்:752/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்