பனை என்பதுபனைமரம்.
1. சொல் பொருள்
(பெ) 1. பனைமரம்.
2. சொல் பொருள் விளக்கம்
சேரமன்னர்களின் குடிப்பூ பனை. பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும், பனைமரம் மரமன்று. அது புல்லெனப்படும்’ என்பர் தொல்காப்பியர். பனையில் ஆண்மரமும், பெண் மரமும் தனித்தனியாக வளரும். இருவகை மரங்களும் பல்லாற் றானும் பயன்படுமாயினும் ஆண்பனை, பெண்பனையைப் போன்று அத்துணைப் பயன்தர வல்லதன்று.
பெண்பனை மரத்தில் இறக்கும் கள்ளிற்குப் பதநீர்’ என்று பெயர். இதனைக் காய்ச்சிப் பனைவெல்லம், பனங்கற்கண்டு முதலியவற்றைப் பெறலாம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
palmyrah-palm
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பனை என் அளவும் கா என் நிறையும் - எழுத். தொகை:27/1 பனையின் முன்னர் அட்டு வரு-காலை - எழுத். உயி.மயங்:82/1 பனையும் அரையும் ஆவிரை கிளவியும் - எழுத். உயி.மயங்:81/1 தினை துணை நன்றி செயினும் பனை துணையா கொள்வர் பயன் தெரிவார் - குறள் 11:4 தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா கொள்வர் பழி நாணுவார் - குறள் 44:3 தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் காமம் நிறைய வரின் - குறள் 129:2 கழை இறால் பனை கனிகள் தேங்கு அலர் - தேம்பா:1 23/1 ஓலைகள் கிடந்த நீள் கமுகொடும் பனை பாலைகள் மா மகிள் பலவு சுள்ளிகள் - தேம்பா:1 37/1,2 பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் - தேம்பா:29 8/4 படு பனை அன்னர் பலர் நச்ச வாழ்வார் - நாலடி:10 6/2 இடுகாட்டுள் ஏற்றை பனை - நாலடி:10 6/4 பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் - நாலடி:11 5/2 பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர் பனை அனைத்து - நாலடி:35 4/2 பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர் பனை அனைத்து - நாலடி:35 4/2 பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய - திணை150:5/2 தினை துணை நன்றி செயினும் பனை துணையா - குறள்:11 4/1 தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா - குறள்:44 3/1 தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் - குறள்:129 2/1 பனை பதித்து உண்ணார் பழம் - பழ:68/4 தம் மேலே வீழ பனை - பழ:201/4 கரும் பனை அன்னது உடைத்து - பழ:286/4 வினை முதிரின் செய்தான் மேல் ஏறும் பனை முதிரின் - பழ:327/3 மற்றையர் ஆவார் பகர்வர் பனையின் மேல் - நாலடி:26 6/2 நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல் பனையின் மேல் - பழ:91/3 இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன - திரு 312 பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் - மது 375 பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் - நற் 126/6 மை இரும் பனை மிசை பைதல உயவும் - நற் 335/7 பல் நூல் மாலை பனை படு கலி_மா - குறு 173/2 அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை/குறிய ஆகும் துறைவனை - குறு 248/5,6 பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய - குறு 372/1 பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் - பதி 36/5 குருகு பறியா நீள் இரும் பனை மிசை - பரி 2/43 நின் ஒன்று உயர் கொடி பனை/நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில் - பரி 4/38,39 வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைகொடி - கலி 104/7 படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை - கலி 138/12 மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ - கலி 142/47 பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் - கலி 147/59 பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை - அகம் 148/1 பனை வெளிறு அருந்து பைம் கண் யானை - அகம் 187/18 வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து - அகம் 333/11 இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை - அகம் 360/16 இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் - அகம் 365/6 மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ - புறம் 22/21 இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் - புறம் 45/1 பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய - புறம் 161/16 பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு - புறம் 249/5 இரும் பனை அன்ன பெரும் கை யானை - புறம் 340/7 வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைகொடி/பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் - கலி 104/7,8 பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் - மது 375 புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு/முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் - பரி 2/22,23 அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும்/மண்-உறு திரு மணி புரையும் மேனி - புறம் 56/4,5 பால் நிற உருவின் பனைக்கொடியோனும்/நீல் நிற உருவின் நேமியோனும் என்று - புறம் 58/14,15 முட பனையத்து வேர் முதலா - புறம் 229/3 இரும் பனையின் குரும்பை நீரும் - புறம் 24/12 இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன - திரு 312 பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன - பால:14 59/3 கொம்புகள் பனை கை நீட்டி குழையொடும் ஒடித்து கோட்டு - பால:16 2/3 பனை மேல் உறைவாய் பழி பூணுதியோ - பால:23 5/4 பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது அ பகடு - பால-மிகை:9 10/4 பனை அவாம் நெடும் கர பரும யானையாய் - அயோ:1 82/1 பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை - அயோ:9 47/3 பனை திரள் கர கரி பரதன் செய்கையே - அயோ:14 42/2 சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள - சுந்-மிகை:1 12/4 பனை கை வன் குரங்கின் படர் சேனையை - யுத்1:9 55/2 பற்றி வானர வீரர் பனை கையால் - யுத்1:9 63/1 பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை - யுத்2:15 232/2 சுட்டன துரக ராசி துணித்தன பனை கைம்மாவை - யுத்2:19 94/3 பற்றினன் வசந்தன் தன்னை பனை தடம் கைகளாலே - யுத்2-மிகை:16 24/1 சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள - சுந்-மிகை:1 12/4 ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின் - சுந்:1 22/2 பனையின் நீள் கரம் பற்றிய கையினாள் - அயோ:4 223/4 ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் - சுந்:3 57/4 பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் - கிட்:11 46/4 பனை திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான் - சிந்தா:5 1220/4 பால் முரண் பயம்பு-இடை பனை மடிந்து அனையன - சிந்தா:8 1900/2 அரும் பனை தட கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ - சிந்தா:10 2154/1 பனை கை யானை மன்னர் பணிய பைம்பொன் முடியில் - சிந்தா:10 2194/1 மடல் பனை குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து - சிந்தா:12 2524/1 பார கூர் தறிகள் நட்டு பனை என பிளப்பர் மாதோ - சிந்தா:13 2771/4 கூப்பிடு குரலாய் நிற்பர் குறை பனை குழாங்கள் ஒத்தே - சிந்தா:13 2772/4 பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனை திரண்டு அனைய தோளான் - சிந்தா:13 2918/4 பனை முந்திற்றோ என கட்டுரை செய் - மணி:30/245 என்றால் எ முட்டைக்கு எ பனை என்றல் - மணி:30/246 மடல் பனை ஊசலொடு மாடம் ஓங்கிய - உஞ்ஞை:40/59 இரும் பனை இள மடல் விரிந்து உளர் வெண் தோட்டு - மகத:1/107 மடல் பனை இடை துணி கடுப்ப பல் ஊழ் - மகத:20/45 இரும் தாள் இளம் பனை விரிந்து இடைவிடாஅ - வத்தவ:16/22 பனையும் வெதிரும் பாசிலை கமுகும் - உஞ்ஞை:40/5 தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே - கலிங்:228/1 பணைத்த பனை வெம் கரி கரத்தால் பரிய கரு நாண் கட்டீரே - கலிங்:512/1 அரும் பனை கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும் - வில்லி:10 88/1 கரும் பனை தட கை வெம் கண் கரி முதல் சேனையோடும் - வில்லி:10 88/3 வன் பனை கொடி மீது பன்னிரு வாளி மெய் கவசத்தின் மேல் - வில்லி:29 38/1 தேரும் விசை கூர் இவுளியும் செறி பனை கை - வில்லி:29 54/1 சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் - வில்லி:31 24/3 மலை கால் பெற்று வருவது போல் வரு திண் பனை கை மா மிசையான் - வில்லி:32 31/2 நினைந்து தன் பனை பதாகை நீடு தேரில் ஏறினான் - வில்லி:38 5/4 கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு - வில்லி:40 50/1 பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் - வில்லி:43 36/1 வேந்தனும் மன்னவனுடன் பல் வேந்தரோடும் வெம் பனை கை பல கோடி வேழத்தோடும் - வில்லி:46 83/2 செம் கனக மணி கொடிஞ்சி திண் தேரும் பெரும் பனை கை சிறுத்த செம் கண் - வில்லி:46 131/3 பாளை அம் பனைகள் பற்பராகம் முதலான பல் மணி பரப்பினான் - வில்லி:10 65/2 பனையின் நீள் உடல் பணிகளை அலகினால் பற்றலின் படர் பந்தி - வில்லி:9 21/3 பனைமது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய - சீறா:51/1 இரும் பனை கை மும்மத கரி கோட்டினை ஈழ்த்திட்டு - சீறா:757/2 பகைத்த காபிர்கள் கூடி பனை கைமா - சீறா:1413/1 பனை தட கர களிறு அனைய பண்பினான் - சீறா:1635/4 திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற - சீறா:3164/3 தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் - சீறா:4130/3 நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ - சீறா:4317/4 பருப்பதத்தை சினந்து பனை கையால் - சீறா:4807/1 பனைமது தேக்கி இரு விழி சேப்ப பைம் கழை நிகர்த்த தோள் அசைய - சீறா:51/1 பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா - திருப்:258/5 பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா - திருப்:259/7 பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா - திருப்:324/5 சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில் - திருப்:351/5 பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி - திருப்:520/2 வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம் - திருப்:652/3 பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம் - திருப்:677/5 பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே - திருப்:940/8 பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர - திருப்:1174/2 இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி - திருப்:495/5 கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம் - நாலாயி:813/1 தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் - நாலாயி:1288/1 பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ - நாலாயி:3234/4 சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் - நாலாயி:3800/3 பனை நெடும் கைமா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் - 6.வம்பறா:1 235/4 நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை - 6.வம்பறா:1 980/3 பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து - 9.கறை:3 7/2 அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் - 6.வம்பறா:1 978/1 மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் - 6.வம்பறா:1 978/2 பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து - 6.வம்பறா:1 519/3 பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் - 6.வம்பறா:2 52/4 சாறு படுவன நான்கு பனை உள - திருமந்:2868/2 ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே - திருமந்:2868/3,4 வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் - திருமந்:2887/2 பனையுள் இருந்த பருந்து அது போல - திருமந்:47/3 பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே - திருக்கோ:74/4 பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே - திருக்கோ:88/4 உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த - திருக்கோ:137/1 பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர் - திருக்கோ:154/1 திரு பனையூர் அனையாளை பொன் நாளை புனைதல் செப்பி - திருக்கோ:137/3 தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன் - திருவா:12 14/1 குரும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் - தேவா-சம்:590/1 பனை திரள் பாய் அருவி பருப்பதம் பரவுதுமே - தேவா-சம்:1278/4 பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே - தேவா-சம்:2430/1 வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த - தேவா-அப்:693/1 வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் - தேவா-அப்:717/3 கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் - தேவா-அப்:721/1 போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் - தேவா-அப்:908/1 பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே - தேவா-அப்:998/1 பனை கை மும்மத வேழம் உரித்தவன் - தேவா-அப்:1082/1 பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் - தேவா-அப்:1338/3 பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால் - தேவா-அப்:2315/3 பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் - தேவா-சுந்:729/2 தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் - தேவா-சுந்:732/2 பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் - தேவா-சம்:2553/3 பனையின் ஈர் உரி போர்த்த பரமே - தேவா-அப்:1299/4 பார் ஆர் விடையான் பனையூர் மேல் - தேவா-சம்:403/1 பரவி பொலியும் பனையூரே - தேவா-சம்:393/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்