Skip to content
குருந்து

குருந்துஎன்பதுகாட்டு எலுமிச்சை வகை.

1. சொல் பொருள்

(பெ)காட்டு எலுமிச்சை வகை, சிறு குருந்து, பெருங்குருந்து

2. சொல் பொருள் விளக்கம்

இது குருந்தம்காட்டு கொளுஞ்சிகாட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படும் ஒருவகை மரம். பார்க்க : குருந்தம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Atalantia racemosa

குருந்து
குருந்து

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மஞ்ஞை
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணை பயிர்ந்து அகவும் – அகம் 85/11-13

மயில்
தேனையுடைய குருந்த மரத்தின் நறுமணம் வீசும்கிளையிலிருந்து
தன் துணையை அழைத்துக் கூப்பிடும்

நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து - அகம் 85/12

வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து - அகம் 194/14

அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய - அகம் 304/10

குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற - நற் 321/9

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் - குறி 95

குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் - கலி 103/3

கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே - ஐங் 436/3

குருந்தே முல்லை என்று - புறம் 335/2

குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும் - குறு 148/4

முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை - கலி 113/25

கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் - அகம் 133/15

குருந்தின் குவி இணர் உள் உறை ஆக - கார்40:15/2

குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:28/1

தன் போல் முழங்கி தளவம் குருந்து அணைய - திணை150:93/3

கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும் - கைந்:25/2

குருந்து அலர - கைந்:29/1

கொன்றாய் குருந்தே கொடி முல்லாய் வாடினீர் - திணை150:81/1

குருந்தே பருவம் குறித்து இவளை நைந்து - திணை150:114/3

குருந்தே கொடி முல்லாய் கொன்றாய் தளவே - திணை150:116/1

பிடவம் குருந்தொடு பிண்டி மலர - கைந்:36/1

ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர் - திணை50:13/1

குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும் - திணை150:112/3

வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் - தேவா-சம்:845/3

குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் - தேவா-சம்:1228/1

திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் - தேவா-சம்:1788/2

கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி - தேவா-சம்:2659/2

மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் - தேவா-சம்:3632/3

குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு - தேவா-சம்:3756/2

குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை - தேவா-சம்:4077/3

கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் - தேவா-அப்:2116/3

குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் - தேவா-சுந்:302/3

குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப - தேவா-சுந்:1007/3

குருந்தொடு கொடி விடு மாதவிகள் - தேவா-சம்:1178/3

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி - தேவா-சம்:2663/1

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை - தேவா-சம்:3013/1

குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே - தேவா-சம்:4126/4

குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் - திருவா:2/61

கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் - 4.மும்மை:5 16/3

பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி - நாலாயி:526/2

போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே - நாலாயி:530/4

பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை - நாலாயி:1291/2

பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து - நாலாயி:1845/1

பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து - நாலாயி:1963/1

குருந்து ஒசித்த கோபாலகன் - நாலாயி:2313/4

உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல - நாலாயி:3489/2

குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை - நாலாயி:3903/2

குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே - திருப்:1072/5

புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் - திருப்:464/5

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் - திருப்:193/9

திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே - திருப்:844/8

கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே - திருப்:1244/7

கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி - சீறா:2054/1

கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் - சீறா:5004/1

விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா - சீறா:1000/2

குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் - வில்லி:26 18/4

குரவும் தளவும் குருந்தும் கோடலும் - உஞ்ஞை:49/98

குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி - உஞ்ஞை:51/42

குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும் - இலாவாண:12/19

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் - மது:17/75

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் - மது:17/88

கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் - மது:17/122

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - மணி:3/160

குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் - மணி:19/93

கோல் நிற வளையினார்க்கு குருந்து அவன் ஒசித்தது என்றான் - சிந்தா:1 209/4

நிறைந்த பூம் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே - சிந்தா:7 1563/4

குயில் இரங்கின குருந்துஇனம் அரும்பின முருந்தம் - அயோ:9 45/4

உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி - பால:1 15/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *