Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

மருந்து மாயம்

சொல் பொருள் மருந்து – மருத்துவம் பார்த்தல்மாயம் – மந்திரம் குறி முதலியன பார்த்தல். சொல் பொருள் விளக்கம் எவருக்காவது நோய் வந்துவிட்டால் ‘நோய்க்கும் பார்’ ‘பேய்க்கும் பார்’என்பது வழக்கம். நோயாகவும் இருக்கும்; பேயாகவும்… Read More »மருந்து மாயம்

மரம் மட்டை

சொல் பொருள் மரம் – ஒரறிவுயிராம் மரம்மட்டை – மரத்தின் உறுப்பாகிய மட்டை. சொல் பொருள் விளக்கம் மட்டை என்பதும் மடல் என்பதும் ஒன்றே. தென்னை, பனை, வாழை, தாழை என்பவற்றிற்கு மட்டையுண்டு. இவை… Read More »மரம் மட்டை

மப்பு மந்தாரம்

சொல் பொருள் மப்பு(மைப்பு) – மை அல்லது முகில் திரண்டிருத்தல்.மந்தாரம் – மழை பெய்தற்குரிய குளிர்காற்று அடித்தல். சொல் பொருள் விளக்கம் மை-முகில்; கருமுகில்; மழை முகில் ‘மை’ எனப்படும். மைப்பு – ‘மப்பு’… Read More »மப்பு மந்தாரம்

மட்டு மரியாதை

சொல் பொருள் மட்டு – தனக்குரிய அளவுமரியாதை – பெருமை சொல் பொருள் விளக்கம் சிலர் செருக்காகப் பேசும் போதோ, நடந்து கொள்ளும் போதோ ‘மட்டுமரியாதை’தெரியாதவன் என்பர். தனக்குரிய அளவும், பிறர்க்குத் தரத் வேண்டிய… Read More »மட்டு மரியாதை

போவாய் பொழுவாய்

சொல் பொருள் போவாய் – பல்போன வாய்பொழுவாய் – நீர் ஒழுக்குடைய வாய் சொல் பொருள் விளக்கம் போய வாய் போவாய் ஆயிற்று; போயது பல் என்க. பொழுவாய் என்பது ஒழுகுகின்ற பொழிகின்ற வாயெனும்… Read More »போவாய் பொழுவாய்

பொள்ளல் பொத்தல்

சொல் பொருள் பொள்ளல் – சின்னஞ்சிறு நுண் துளைபொத்தல் – பெரிய துளை அல்லது ஓட்டை சொல் பொருள் விளக்கம் பொள்ளலில் நீர் கசியும்; பொத்தலில் நீர் ஒழுகும். ஆதலால் மண்கலம் வாங்குவார் பொத்தல்… Read More »பொள்ளல் பொத்தல்

பொய்யும் வழுவும்

சொல் பொருள் பொய் – விளையாட்டுப் போல ஒன்றைச் செய்து விலகி விடுதல்.வழு – உறுதிமொழி தந்து அவ்வுறுதியை வழுவி-விலகிப் போய் விடுதல். சொல் பொருள் விளக்கம் திருமணச் சடங்குமுறை தோன்றுதற்கு அடிப்படையாக இருந்தவை… Read More »பொய்யும் வழுவும்

பொய் புளுகு

சொல் பொருள் பொய் – உண்மை அல்லது உள்ளீடு இல்லாததை உள்ளது போல் கூறுதல்.புளுகு – பொய்யை ஒட்டிப் புனைந்து கூறுதல். சொல் பொருள் விளக்கம் பொய் கூறுவதும் அதனைப் பொருத்திக் காட்டுவதற்குப் புளுகுவதும்… Read More »பொய் புளுகு

பொய் புரட்டு

சொல் பொருள் பொய் – உண்மை இல்லாததை(உள்ளீடு இல்லாததை)க் கூறுதல்.புரட்டு – ஒன்றை ஒன்றாக மாற்றிக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் இல்லாத ஒன்றைக் கூறுவது பொய்; இருக்கும் ஒன்றை நேருக்கு மாறாக மாற்றிக்… Read More »பொய் புரட்டு

பொந்து புடை

சொல் பொருள் பொந்து – மரத்தில் உண்டாகிய ஓட்டை.புடை – நிலத்தில் உண்டாகிய ஓட்டை. சொல் பொருள் விளக்கம் ‘பொந்து ஆயிரம் புளி ஆயிரம்’ என்னும பழமொழி புளியின் தன்மையைக் கூறும். புளி பொந்துபட… Read More »பொந்து புடை