குரவம் என்பது குரவமரம்.
1. சொல் பொருள்
(பெ) ஒரு பூ, மரம், குரவு, குரா.
2. சொல் பொருள் விளக்கம்
- குரவமரம் நீண்ட நீண்ட சினைகளை(கிளைகளை) (வலார் போன்ற கிளைகளை) உடையது. இதன் பூக்களைக் குயில்கள் விரும்பி உண்டு அதில் வாழும்.
- அரும்பு பாம்புப் பல்லைப் போல இருக்கும். பூவின் நிறம் வெள்ளை.
- குரவம்பூ மணம் மிக்கது. நறுமணம் மிக்க குரவம் பூவைப் ‘பாவை’ என்பர். மொட்டுக்கூட மணக்கும்
- குரவ மலரின் நனை-அரும்புகள் மரக்கிளைகளில் பசுமை நிறத்தில் காணப்படும்.
- குரவம் என்னும் மலர் கொத்துக்கொத்தாகப் பூக்கும்
- பூவின் காம்பு சிறிதாக இருக்கும்.
- காட்டில் பூக்கும் மலர்
- குரவம்பூ மிகுதியான மகரந்தப் பொடிகளை உடையது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Bottle-flower, Tarenna asiatica, Webera corymbosa
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இது காட்டில் வளரக்கூடியது. குரவம் மலர மரவம் பூப்பச் சுரன் அணி கொண்ட கானம் – ஐங் 357/1,2 கானம் என்பது காடு. மிகுந்த நறுமணம் உடையது. பாவை என்றும் அழைக்கப்படும். நறும் பூ குரவம் பயந்த செய்யா பாவை கொய்யும் பொழுதே – ஐங் 344/1,2 நறுமணமிக்க பூக்களைக் கொண்ட குரவமரம் உண்டாக்கிய கையினால் செய்யப்படாத பாவையைப் போன்ற மலர்களைக் கொய்யும் காலம் கொத்துக்கொத்தாகப் பூக்கக்கூடியது. பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69 இணர் என்பது பூங்கொத்து. இவ்வாறு பலபூங்கொத்துகளை ஒன்றாகச் சேர்த்தது போல் பூக்கும். இதன் அரும்புகள் பச்சை நிறத்தில் இருக்கும். பல் வீ படரிய பசு நனை குரவம் – குறு 341/1 பல பூக்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம் வண்டுகள் மொய்க்கும்போது இதன் பூக்கள் வெள்ளிக்கம்பி போல் உதிரும். வெள்ளி நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/8-11 வெள்ளியின் மெல்லிய கம்பி துண்டுகளாக வெட்டப்பட்டு உதிர்வன போல ஒலிக்கின்ற வண்டுக்கூட்டம் மொய்க்கும்போதெல்லாம், குரவமரத்தின் உயர்ந்த கிளைகளிலுள்ள நறிய பூக்கள், கோங்கின் பூக்களுக்குள் உதிர பாம்பின் பல் போன்று சிறியதாகவும் கூர்மையாகவும் இதன் அரும்புகள் இருக்கும். அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3 எயிறு என்பது பல்.குரவு என்பது குரவம். முன்பனிக்காலத்தில் தளிர்விட்டு அரும்புகள் தோன்ற ஆரம்பிக்கும். பின்பனி அமையம் வரும் என முன்பனி கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே – நற் 224/2,3 பின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில் தளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே! இளவேனில் காலத்துத் தொடக்கத்தில் பூக்க ஆரம்பிக்கும். குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் – அகம் 97/16,17 குரவம் மலர்ந்து முன்பனிக்காலம் நீங்கப்பெற்ற அரிய பக்குவத்தையுடைய இளவேனில் காலம் இந்த மரம் குட்டையாக இருக்கும். குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ – நற் 56/1 குட்டையாக நிற்கும் குரா மரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்ட நறிய மலர்களில் உயரமான மரங்கள் ‘ஓங்கு நிலை’ என்று கூறப்படும். குட்டையான இந்த மரத்தின் குவிந்த கொத்துக்களாக இருக்கும் பூக்கள் வெண்மை நிறத்தவை குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/2 குட்டையான காலினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளையான பூ பயினி வானி பல் இணர் குரவம்/பசும்பிடி வகுளம் பல் இணர் காயா - குறி 69,70 பல் வீ படரிய பசு நனை குரவம்/பொரி பூ புன்கொடு பொழில் அணி கொளாஅ - குறு 341/1,2 நறும் பூ குரவம் பயந்த - ஐங் 344/2 குரவம் மலர மரவம் பூப்ப - ஐங் 357/1 குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ - நற் 56/1 குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ - நற் 266/2 அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்/தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ - அகம் 237/3,4 கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே - நற் 224/3 கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து - அகம் 97/16 குரவம் நீள் வேலி கோலும் குடங்கையுள் துஞ்சி-தன்னை - தேம்பா:12 13/1 குரவம் நீண்ட குடங்கை கரந்த பூ - தேம்பா:30 98/3 குரவமே பின்னிய கூறையால் உடல் - தேம்பா:26 135/1
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் - மது:12/84 குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் - மது:11/207 குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - மது:13/151 குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - மணி:3/160 குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய் - சிந்தா:5 1196/1 நற விரி சோலை ஆடி நாள்மலர் குரவம் பாவை - சிந்தா:5 1270/1 செறிந்த பொன் இதழ் பைம் தார் கொன்றை அம் செல்வற்கு குரவம் அறிந்து பாவையை கொடுப்ப தோன்றி அம் சுடர் ஏந்த - சிந்தா:7 1563/2,3 குரவம் கொண்ட குறும்பூழ் போல் கொழும் கால் முகை சுமந்தன - சிந்தா:7 1651/3 குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை - சிந்தா:8 1918/2 குரவம் பாவை கொப்புளித்து குளிர் சங்கு ஈர்ந்த துகளே போல் - சிந்தா:13 2690/1 குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும் - ஆரண்:2 1/1 குரவம் கமழ் நறு மென் குழல் உமை புல்குதல் குணமே - தேவா-சம்:101/4 குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ - தேவா-சம்:130/1 கொந்து ஆர் மலர் புன்னை மகிழ் குரவம் கமழ் குன்றில் - தேவா-சம்:178/3 குரவம் சுரபுன்னையும் வன்னி - தேவா-சம்:405/3 குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இள வேங்கை - தேவா-சம்:885/3 குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று விண்ணோர் - தேவா-சம்:949/1 குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் - தேவா-சம்:1864/1 குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் - தேவா-சம்:2028/2 பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே - தேவா-சம்:2122/4 குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே - தேவா-சம்:2242/4 பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர - தேவா-சம்:2375/3 குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் - தேவா-சம்:2551/3 குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் - தேவா-சம்:2710/3 குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள் - தேவா-சம்:2745/3 செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை - தேவா-அப்:681/3 குரவம் நாறும் குழல் உமை கூறராய் - தேவா-அப்:1146/3 குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே - தேவா-அப்:2447/3 குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா - தேவா-சுந்:325/3 குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் - தேவா-சுந்:366/1 குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று - தேவா-சுந்:380/1 குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப - தேவா-சுந்:1007/3 கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர் - தேவா-சம்:847/3 தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் - தேவா-சம்:3131/2,3 குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு - தேவா-சம்:3756/2 கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:3183/1 கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை - தேவா-சம்:3778/1 குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய் - தேவா-சம்:1531/1 குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே - தேவா-சம்:1841/4 குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் - தேவா-சம்:2447/3 குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி - தேவா-அப்:824/3 குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் - திருவா:5 17/2 குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை - திருவா:26 5/2 குரவம் செய்கின்ற குழலியை நாடி - திருமந்:1134/2 குரவம் செய்கின்ற குழலியை உன்னி - திருமந்:1528/2 கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் - 1.திருமலை:2 28/2 கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி - 1.திருமலை:5 94/2 குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல - நாலாயி:1074/3 குழுவும் வார் கமுகும் குரவம் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும் - நாலாயி:1753/3 செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே - திருப்:794/8 எனது மன பங்கயம் குவளை குரவம்புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ - திருப்:1220/2 பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே - திருப்:104/7,8 உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா - திருப்:150/18 குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா - திருப்:226/7 குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே - திருப்:256/4 சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ - திருப்:336/4 குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா - திருப்:345/6 அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே - திருப்:369/14 மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர் - திருப்:1005/7 குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் - திருப்:1107/7 மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் - திருப்:1232/3 சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும் பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் - சீறா:4210/3,4 குரவம் பாவை கொண்டு ஓலுறுத்து ஆடியும் - இலாவாண:14/19 குரவம் பாவை குறு மலர் நசைஇ - நரவாண:2/17 குரவம் தளவும் குருந்தும் கோடலும் - உஞ்ஞை:49/98 சேவும் குரவம் சினை பிளந்து அளைந்து - உஞ்ஞை:51/46 இரவும் இண்டும் குரவம் கோங்கும் - உஞ்ஞை:52/40 கோங்கமும் குரவம் கொடி குருக்கத்தியும் - இலாவாண:12/14
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்