குருந்துஎன்பதுகாட்டு எலுமிச்சை வகை.
1. சொல் பொருள்
(பெ)காட்டு எலுமிச்சை வகை, சிறு குருந்து, பெருங்குருந்து
2. சொல் பொருள் விளக்கம்
இது குருந்தம், காட்டு கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படும் ஒருவகை மரம். பார்க்க : குருந்தம்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Atalantia racemosa
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மஞ்ஞை நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து துணை பயிர்ந்து அகவும் – அகம் 85/11-13 மயில் தேனையுடைய குருந்த மரத்தின் நறுமணம் வீசும்கிளையிலிருந்து தன் துணையை அழைத்துக் கூப்பிடும் நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து - அகம் 85/12 வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து - அகம் 194/14 அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய - அகம் 304/10 குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற - நற் 321/9 மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் - குறி 95 குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் - கலி 103/3 கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே - ஐங் 436/3 குருந்தே முல்லை என்று - புறம் 335/2 குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும் - குறு 148/4 முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை - கலி 113/25 கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் - அகம் 133/15 குருந்தின் குவி இணர் உள் உறை ஆக - கார்40:15/2 குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:28/1 தன் போல் முழங்கி தளவம் குருந்து அணைய - திணை150:93/3 கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும் - கைந்:25/2 குருந்து அலர - கைந்:29/1 கொன்றாய் குருந்தே கொடி முல்லாய் வாடினீர் - திணை150:81/1 குருந்தே பருவம் குறித்து இவளை நைந்து - திணை150:114/3 குருந்தே கொடி முல்லாய் கொன்றாய் தளவே - திணை150:116/1 பிடவம் குருந்தொடு பிண்டி மலர - கைந்:36/1 ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர் - திணை50:13/1 குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும் - திணை150:112/3 வடம் உலை அயலன கரும் குருந்து ஏறி வாழையின் தீம் கனி வார்ந்து தேன் அட்டும் - தேவா-சம்:845/3 குருந்து அவன் குருகு அவன் கூர்மை அவன் - தேவா-சம்:1228/1 திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் - தேவா-சம்:1788/2 கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி - தேவா-சம்:2659/2 மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் - தேவா-சம்:3632/3 குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு - தேவா-சம்:3756/2 குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை - தேவா-சம்:4077/3 கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும் - தேவா-அப்:2116/3 குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் - தேவா-சுந்:302/3 குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப - தேவா-சுந்:1007/3 குருந்தொடு கொடி விடு மாதவிகள் - தேவா-சம்:1178/3 கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி - தேவா-சம்:2663/1 குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை - தேவா-சம்:3013/1 குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே - தேவா-சம்:4126/4 குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் - திருவா:2/61 கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் - 4.மும்மை:5 16/3 பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி - நாலாயி:526/2 போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே - நாலாயி:530/4 பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை - நாலாயி:1291/2 பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து - நாலாயி:1845/1 பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து - நாலாயி:1963/1 குருந்து ஒசித்த கோபாலகன் - நாலாயி:2313/4 உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல - நாலாயி:3489/2 குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை - நாலாயி:3903/2 குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே - திருப்:1072/5 புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம் - திருப்:464/5 கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் - திருப்:193/9 திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே - திருப்:844/8 கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே - திருப்:1244/7 கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி - சீறா:2054/1 கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் - சீறா:5004/1 விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா - சீறா:1000/2 குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும் உண்மை ஆம்வகை கூறினான் - வில்லி:26 18/4 குரவும் தளவும் குருந்தும் கோடலும் - உஞ்ஞை:49/98 குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி - உஞ்ஞை:51/42 குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும் - இலாவாண:12/19 கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் - மது:17/75 கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் - மது:17/88 கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் - மது:17/122 குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - மணி:3/160 குருந்தும் தளவும் திருந்து மலர் செருந்தியும் - மணி:19/93 கோல் நிற வளையினார்க்கு குருந்து அவன் ஒசித்தது என்றான் - சிந்தா:1 209/4 நிறைந்த பூம் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே - சிந்தா:7 1563/4 குயில் இரங்கின குருந்துஇனம் அரும்பின முருந்தம் - அயோ:9 45/4 உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி - பால:1 15/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்