Skip to content
தலை

தலை என்பதன் பொருள் சிரம், முதல், இடம், நுனி, முனை, உச்சி, மேற்பரப்பு, ஆள்.

1. சொல் பொருள்

1. (வி) 1. மழை பெய், 2. சேர், கூடு,

2. (வி.அ) அத்துடன்,

3. (பெ) 1. சிரம், 2. முதல், 3. இடம், 4. நுனி, முனை, 5. உச்சி, மேற்பரப்பு, 6.ஆள்

2. சொல் பொருள் விளக்கம்

தலை என்பது தலையைக் குறித்தல் பொது வழக்கு. அது தலையைக் குறியாமல் ‘ஆள்’, ஆளுக்கு எனக் குறித்தல் உண்டு. அதுவும் பொது வழக்காகிவிட்டது. “தலைக்கு ஐந்து கொடு” என்பதில் ஆளுக்கு என்பதே பொருள். இது பெரும் பிழைப் பொது வழக்காகத் ‘தலா’ என வழங்குகின்றது. துலை என்னும் ஏற்ற இறைவைப் பொறியும் தலாக் கிணறு, தலா எனப் பிழை வழக்குக் கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

rain, join, unite, in addition to, besides, head, origin, beginning, place, end, tip, top

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே – நற் 328/6,7

சிறிய பலவான மின்னல், இடி போன்றவற்றைக் கொண்டு வலமாக ஏறி
பெரும் மழை பெய்வதாக, இங்கே

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 311,312

(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை

தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385

மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி – திரு 53,54

கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9

முதல்மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில்

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து

வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 87,88

வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,

இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336

ஓடுகின்ற நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து - திரு 9

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர - திரு 53,54

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர - திரு 227

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் - பொரு 1

தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு 142

நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் - பொரு 240

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் - சிறு 147

மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் - பெரும் 32

வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் - பெரும் 87

இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் - பெரும் 91

முரண் தலை கழிந்த பின்றை மறிய - பெரும் 147

கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் - பெரும் 150

ஈர் உடை இரும் தலை ஆர சூடி - பெரும் 219

கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த - பெரும் 284

கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப - பெரும் 286

உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப - பெரும் 291,292

மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ - பெரும் 410

நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு - முல் 1

பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து - முல் 41

ஆண் தலை அணங்கு அடுப்பின் - மது 29

முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு - மது 199

மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே - மது 237

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி - மது 275

நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார் - மது 322

இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் - மது 336

இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து - மது 380

பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப - மது 396

இரு தலை வந்த பகை முனை கடுப்ப - மது 402

நாள்அங்காடி நனம் தலை கம்பலை - மது 430

நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக - மது 539

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு 103

திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக - நெடு 160

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு - நெடு 176

துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் - குறி 37

பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி - குறி 224

மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ - பட் 69

புன் தலை இரும் பரதவர் - பட் 90

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் - பட் 193

முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள் - பட் 230

தலை தவ சென்று தண் பணை எடுப்பி - பட் 239

வெண் புடை கொண்ட துய் தலை பழனின் - மலை 178

துருவின் அன்ன புன் தலை மகாரோடு - மலை 217

புள் கை போகிய புன் தலை மகாரோடு - மலை 253

நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் - மலை 270

ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும் - மலை 272,273

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை - மலை 305

கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி - மலை 307

தளி பொழி கானம் தலை தவ பலவே - மலை 385

தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் - மலை 407

பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய - மலை 488

வரை வாழ் வருடை வன் தலை மா தகர் - மலை 503

தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து - மலை 565

தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் - மலை 581

வல்லிய பெரும் தலை குருளை மாலை - நற் 2/5

சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க - நற் 7/1

தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் - நற் 36/3

பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி - நற் 37/1,2

அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு - நற் 37/9

தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்
த நின் - நற் 39/6

அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு - நற் 39/8

துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி - நற் 57/3

உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட - நற் 66/2

மன்ற எருமை மலர் தலை காரான் - நற் 80/1

கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் - நற் 89/1

புன் தலை மட பிடி கன்றோடு ஆர - நற் 92/7

துய் தலை மந்தி வன் பறழ் தூங்க - நற் 95/4

துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு - நற் 97/6

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் - நற் 110/3

துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் - நற் 111/2

தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் - நற் 112/7

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் - நற் 113/9

இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை - நற் 116/4

துகிலிகை அன்ன துய் தலை பாதிரி - நற் 118/8

வாழ்தும் என்ப நாமே அதன் தலை - நற் 129/6

கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப - நற் 129/7

அயலும் மாண் சிறையதுவே அதன் தலை - நற் 132/7

கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் - நற் 137/6

சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும் - நற் 142/7

தலை இறைஞ்சினளே அன்னை - நற் 147/11

புன் தலை பாறு மயிர் திருத்தும் - நற் 151/11

அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலை - நற் 166/6

புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் - நற் 168/5

பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி - நற் 169/4

ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் - நற் 169/6

நிலம் செல செல்லா கயம் தலை குழவி - நற் 171/3

மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு - நற் 177/2

வறும் தலை பெரும் களிறு போல - நற் 182/9

துய் தலை புது மலர் துளி தலை கலாவ - நற் 193/2

துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி - நற் 206/1

முடியாது ஆயினும் வருவர் அதன்தலை - நற் 208/10

அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலை - நற் 224/1

சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க - நற் 268/1

நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு - நற் 291/2

இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து - நற் 293/3

அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் - நற் 298/5,6

சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி - நற் 306/6

கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் - நற் 309/5

தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை - நற் 317/3

புன் தலை மட பிடி புலம்பிய குரலே - நற் 318/9

கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற் 325/1

துய் தலை மந்தி தும்மும் நாட - நற் 326/4

தலை நாள் அன்ன பேணலன் பல நாள் - நற் 332/8

மாதிர நனம் தலை புதைய பாஅய் - நற் 347/2

பெரும் சேஇறவின் துய் தலை முடங்கல் - நற் 358/8

தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி - நற் 362/3

இரும் கழி துழவும் பனி தலை பரதவர் - நற் 372/11

புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை - நற் 373/2

இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை - நற் 375/7

புன் தலை மந்தி கல்லா வன் பறழ் - நற் 379/1

மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை - நற் 391/4

மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் - நற் 392/3

மரம் தலைமணந்த நனம் தலை கானத்து - நற் 394/1

அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை - நற் 394/2

நனம் தலை உலகமும் துஞ்சும் - குறு 6/3

பைதல் ஒரு தலை சேக்கும் நாடன் - குறு 13/3

பூ இல் வறும் தலை போல புல்லென்று - குறு 19/2

புன் தலை மன்றம் நோக்கி மாலை - குறு 64/2

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு - குறு 124/1,2

கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி - குறு 132/4

வெண் தலை புணரி ஆடியும் நன்றே - குறு 144/2

தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் - குறு 146/3

நெருப்பின் அன்ன செம் தலை அன்றில் - குறு 160/1

கழுது கண் பனிப்ப வீசும் அதன்தலை - குறு 161/2

சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன - குறு 163/2

தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே - குறு 172/7

விழு தலை பெண்ணை விளையல் மா மடல் - குறு 182/1

சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு - குறு 183/3

வெம் சின அரவின் பைம் தலை துமிய - குறு 190/4

மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் - குறு 203/2

கவை தலை முது கலை காலின் ஒற்றி - குறு 213/2

இரலை மேய்ந்த குறை தலை பாவை - குறு 220/2

தலை புணை கொளினே தலை புணை கொள்ளும் - குறு 222/1

துளி தலை தலைஇய தளிர் அன்னோளே - குறு 222/7

புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் - குறு 229/2

கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் - குறு 241/3

தலை அலர் வந்தன வாரா தோழி - குறு 254/3

பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு - குறு 268/4

நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த - குறு 272/3

சுரி ஆர் உளை தலை பொலிய சூடி - குறு 281/4

இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் - குறு 285/6,7

கல் உயர் நனம் தலை நல்ல கூறி - குறு 297/5

அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்தலை - குறு 302/2

அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து - குறு 308/2

தலை புடை போக்கி தண் கயத்து இட்ட - குறு 330/2

வேறு யான் கூறவும் அமையாள் அதன்தலை - குறு 366/3

பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய - குறு 372/1

ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி - குறு 372/4

முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை - குறு 382/2

தாம் நீர் நனம் தலை புலம்ப - குறு 391/8

முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி - குறு 394/1

புன் தலை பேடை வரி நிழல் அகவும் - ஐங் 62/2

தலை பெயல் செம் புனல் ஆடி - ஐங் 80/3

வெண் தலை குருகின் மென் பறை விளி குரல் - ஐங் 86/1

வெண் தலை மா மழை சூடி - ஐங் 209/4

தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் - ஐங் 270/2

புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் - ஐங் 273/2

உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை - ஐங் 321/1

அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி - ஐங் 321/2

அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது - ஐங் 326/1

ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு - ஐங் 329/1,2

இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப - பதி 12/2

வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் - பதி 13/6

கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க - பதி 13/15

வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு - பதி 15/17

நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என - பதி 17/9

ஒலி தலை விழவின் மலியும் யாணர் - பதி 22/30

அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே - பதி 23/25

நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே - பதி 25/13

நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று - பதி 28/10

வெம்மை அரிது நின் அகன் தலை நாடே - பதி 28/14

வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் - பதி 30/17

நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப - பதி 31/4

மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று - பதி 32/4

தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை - பதி 35/6

மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து - பதி 41/21

வெண் தலை குரூஉ பிசிர் உடைய - பதி 42/22

வைத்தலை மறந்த துய் தலை கூகை - பதி 44/18

நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து - பதி 45/9

ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய - பதி 46/9

நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் - பதி 50/15

நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற - பதி 55/17

பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய - பதி 59/14

பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே - பதி 62/19

நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் - பதி 63/18

தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு - பதி 67/10

வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் - பதி 67/16

நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த - பதி 69/16

மருதம் சான்ற மலர் தலை விளை வயல் - பதி 73/7

வேறு படு நனம் தலை பெயர - பதி 74/27

நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து - பதி 86/5

தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் - பதி 87/3

தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து - பதி 88/3

ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர - பரி 1/1,2

உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை - பரி 1/25

ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் - பரி 1/46

தலை இறுபு தாரொடு புரள - பரி 2/41

தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் - பரி 2/73

ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட - பரி 3/59

பாம்பு பூண் பாம்பு தலை மேலது - பரி 4/45

நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ - பரி 6/3

தலை தொட்டேன் தண் பரங்குன்று - பரி 6/95

தாமம் தலை புனை பேஎம் நீர் வையை - பரி 7/84

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2

இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி - பரி 9/36

வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம் - பரி 9/83

செல வரை காணா கடல் தலை கூட - பரி 10/2

எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து - பரி 11/2

நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே - பரி 12/102

கவை நா அரும் தலை காண்பின் சேக்கை - பரி 13/29

மூ உரு ஆகிய தலைபிரிஒருவனை - பரி 13/38

அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின் - பரி 15/19

கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ - பரி 16/8

தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல் - பரி 19/17

ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த - பரி 19/72

திருந்து அடி தலை உற பரவுதும் தொழுது - பரி 23/6

அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த - பரி 23/85

தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்_கால் - கலி 1/12

தெருமந்து சாய்த்தார் தலை
தெரிஇழாய் நீயும் நின் கேளும் புணர - கலி 39/26,27

கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்தலை - கலி 57/13

மெல்ல இறைஞ்சும் தலை
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை - கலி 61/6,7

தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின் - கலி 66/15

புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி - கலி 71/2

பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என - கலி 78/4

நயம் தலை மாறுவார் மாறுக மாறா - கலி 80/1

கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ் - கலி 80/2

தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் - கலி 82/23

முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு - கலி 83/29,30

பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை - கலி 85/22

கை புனை முக்காழ் கயம் தலை தாழ - கலி 86/2

நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் - கலி 93/14

தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று - கலி 101/1

எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே - கலி 103/79

ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் - கலி 106/40

அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி - கலி 106/47

தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை - கலி 116/2

கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் - கலி 116/14

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச - கலி 119/6

தலை உற முன் அடி பணிவான் போலவும் - கலி 128/17

மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர - கலி 129/6

நின் தலை வருந்தியாள் துயரம் - கலி 133/18

தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு - கலி 138/2

காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என் - கலி 139/20

துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே - கலி 139/37

காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை - கலி 143/40

வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் - கலி 148/2

கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட - அகம் 3/3

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் - அகம் 5/22,23

தலை முடி சான்ற தண் தழை உடையை - அகம் 7/2

மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு - அகம் 7/16,17

துய் தலை வெண் காழ் பெறூஉம் - அகம் 7/21

துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் - அகம் 8/15

இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே - அகம் 12/5

உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் - அகம் 19/3,4

வெண் தலை புணரி ஆயமொடு ஆடி - அகம் 20/8

என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் - அகம் 21/14

பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை - அகம் 21/15

சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல் - அகம் 34/1

ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப - அகம் 36/14

குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி - அகம் 38/13

இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு - அகம் 39/12

என்றூழ் உழந்த புன் தலை மட பிடி - அகம் 43/3

எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து - அகம் 47/3,4

வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்வினை பொருள்பிணி - அகம் 51/7,8

குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் - அகம் 57/6

புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை - அகம் 59/7

மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை
உயவல் யானை வெரிநு சென்று அன்ன - அகம் 65/13,14

மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின் - அகம் 67/4,5

அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்தலை - அகம் 68/9

புன் தலை மட பிடி பூசல் பல உடன் - அகம் 68/18

தலை நாள் அலரின் நாறும் நின் - அகம் 69/19

நனம் தலை கானத்து ஆளி அஞ்சி - அகம் 78/1

நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப - அகம் 79/9

கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை - அகம் 81/7

சுரி ஆர் உளை தலை பொலிய சூடி - அகம் 83/2

வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் - அகம் 83/10

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12

தலை குரல் விடியல் போகி முனாஅது - அகம் 87/6

உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை
உருத்து எழு குரல குடிஞை சேவல் - அகம் 89/2,3

திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த - அகம் 89/13

மூத்தோர் அன்ன வெண் தலை புணரி - அகம் 90/1

வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் - அகம் 91/7,8

பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் - அகம் 97/7

இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு - அகம் 101/11

நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த - அகம் 103/1

புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை - அகம் 104/11

முகை தலை திறந்த வேனில் - அகம் 105/16

அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் - அகம் 108/13

விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் - அகம் 109/6,7

புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் - அகம் 113/3

கரும் கால் ஓமை ஏறி வெண் தலை
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் - அகம் 117/6,7

கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி - அகம் 121/5

தலை நாள் மா மலர் தண் துறை தயங்க - அகம் 126/4

துளி தலை தலைஇய சாரல் நளி சுனை - அகம் 132/9

தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் - அகம் 136/18

வற்றல் மரத்த பொன் தலை ஓதி - அகம் 145/3

நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்தலை - அகம் 158/14

கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என - அகம் 165/1

தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ - அகம் 166/12

மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட - அகம் 169/1

அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் - அகம் 169/2,3

கழை அமல் சிலம்பின் வழை தலை வாட - அகம் 177/7

கனவினும் பிரிவு அறியலனே அதன்தலை - அகம் 178/20

புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை - அகம் 184/9

பூ தொடை விழவின் தலை நாள் அன்ன - அகம் 187/8

உழை கடல் வழங்கலும் உரியன் அதன்தலை - அகம் 190/10

அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191/1

சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல் - அகம் 195/13

புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு - அகம் 197/12

கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப - அகம் 202/2

உத்தி அரவின் பை தலை துமிய - அகம் 202/10

உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக - அகம் 202/11,12

படு பிண பைம் தலை தொடுவன குழீஇ - அகம் 215/13

கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை - அகம் 221/10,11

யாத்த தூணி தலை திறந்தவை போல் - அகம் 225/10

கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி - அகம் 229/4

படுகளத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை - அகம் 231/6

நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி - அகம் 238/8

அருவி ஆன்ற வெருவரு நனம் தலை
பேஎய்வெண்தேர் பெயல் செத்து ஓடி - அகம் 241/8,9

புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் - அகம் 241/11,12

வட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும் - அகம் 241/14,15

மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் - அகம் 245/12

பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும் - அகம் 247/6

இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று - அகம் 253/13

தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து - அகம் 258/5,6

நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு - அகம் 261/10

மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ - அகம் 266/3

வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி - அகம் 271/4,5

தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு - அகம் 273/10

ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப - அகம் 274/4

அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை
பொத்து உடை மரத்த புகர் படு நீழல் - அகம் 277/9,10

துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க - அகம் 287/9,10

கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் - அகம் 288/12

கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் - அகம் 290/3

இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை - அகம் 293/1

துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை - அகம் 294/6

என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி - அகம் 295/3,4

தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் - அகம் 301/22

புன் தலை மன்றம் காணின் வழி நாள் - அகம் 301/24

கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை
மா இரும் கொல்லி உச்சி தாஅய் - அகம் 303/5,6

முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ - அகம் 306/3

இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை
பெரும் கை எண்குஇனம் குரும்பி தேரும் - அகம் 307/9,10

பழ விறல் நனம் தலை பய மலை நாட - அகம் 318/7

படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென - அகம் 319/5,6

புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் - அகம் 321/10

மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் - அகம் 327/10,11

அரவின் பைம் தலை இடறி பானாள் - அகம் 328/4

தண்டா காதலும் தலை நாள் போன்மே - அகம் 332/15

தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய - அகம் 333/10

இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி - அகம் 339/9

ஒரு தலை படாஅ உறவி போன்றனம் - அகம் 339/10

புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் - அகம் 343/5

நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை - அகம் 343/10

கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி - அகம் 347/13

கை தலை வைத்த மையல் விதுப்பொடு - அகம் 347/14

ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென - அகம் 350/12

சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ - அகம் 364/6

கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி - அகம் 366/3

பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் - அகம் 372/2,3

மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு - அகம் 374/2

வம்ப வடுகர் பைம் தலை சவட்டி - அகம் 375/14

துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை - அகம் 376/16

நரை மூதாளர் அதிர் தலை இறக்கி - அகம் 377/7

உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு - அகம் 387/4

விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் - அகம் 391/4

சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் - அகம் 394/2

ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் - அகம் 395/6,7

குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு - அகம் 400/9

வெண் தலை புணரி குட கடல் குளிக்கும் - புறம் 2/10

சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை - புறம் 2/21

பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து - புறம் 3/11

பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே - புறம் 7/13

பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் - புறம் 15/3

கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப - புறம் 17/38

எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் - புறம் 19/13

மலர் தலை உலகத்து தோன்றி - புறம் 24/35

முடி தலை அடுப்பு ஆக - புறம் 26/8

பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி - புறம் 29/4

வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப - புறம் 31/14

இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து - புறம் 34/12

நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த - புறம் 37/1

அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் - புறம் 42/5

பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் - புறம் 44/7

புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி - புறம் 46/6

ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து - புறம் 53/9

சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா - புறம் 54/12

வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் - புறம் 55/20

நனம் தலை பேரூர் எரியும் நைக்க - புறம் 57/7

வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் - புறம் 61/8

காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே - புறம் 63/15

நறும் சேறு ஆடிய வறும் தலை யானை - புறம் 68/16

பொருதும் என்று தன் தலை வந்த - புறம் 76/11

இரு தலை ஒசிய எற்றி - புறம் 80/8

பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என - புறம் 89/3

பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே - புறம் 98/20

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ - புறம் 101/3

ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை - புறம் 103/1

ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி - புறம் 103/1,2

மனை தலை மகவை ஈன்ற அமர் கண் - புறம் 117/4

பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே - புறம் 132/9

புன் தலை மட பிடி பரிசில் ஆக - புறம் 151/4

புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது - புறம் 152/3,4

துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் - புறம் 158/24

வாள் தந்தனனே தலை எனக்கு ஈய - புறம் 165/12

அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - புறம் 168/1,2

மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் - புறம் 186/2

அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை - புறம் 191/5

நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் - புறம் 200

இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை - புறம் 200

வறும் தலை உலகமும் அன்றே அதனால் - புறம் 206/9

அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய - புறம் 211/2

பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து - புறம் 213/3

நின் தலை வந்த இருவரை நினைப்பின் - புறம் 213/4

காதல் கிழமையும் உடையவன் அதன்தலை - புறம் 216/10

நனம் தலை உலகம் அரந்தை தூங்க - புறம் 221/11

ஞாலம் காவலர் கடை தலை
காலை தோன்றினும் நோகோ யானே - புறம் 225/13,14

நனம் தலை மூதூர் கலம் செய் கோவே - புறம் 228/4

தலை நாள்மீன் நிலை திரிய - புறம் 229/6

புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே - புறம் 235/9

அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ - புறம் 235/10

தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று - புறம் 243/12

முனி தலை புதல்வர் தந்தை - புறம் 250/8

நனம் தலை மூதூர் கலம் செய் கோவே - புறம் 256/7

இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த - புறம் 259/2

நறு விரை துறந்த நாறா நரை தலை
சிறுவர் தாயே பேரில்_பெண்டே - புறம் 270/5,6

மண்உறு மழி தலை தெண் நீர் வார - புறம் 280/11

வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடு - புறம் 285

அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து - புறம் 285/13

கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை - புறம் 291/6,

மணி மருள் மாலை சூட்டி அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே - புறம் 291/7,8

கயம் தலை மட பிடி புலம்ப - புறம் 303/8

புன் தலை மட பிடி நாண - புறம் 308/10

ஈன்று புறந்தருதல் என் தலை கடனே - புறம் 312/1

கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி - புறம் 319/10

புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும் - புறம் 319/11

புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் - புறம் 322/4

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் - புறம் 324/1,2

கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் - புறம் 325/12

புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் - புறம் 334/3

புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே - புறம் 346/7

நாள் கடா அழித்த நனம் தலை குப்பை - புறம் 353/9

விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ் - புறம் 369/14

அகன் தலை வையத்து புரவலர் காணாது - புறம் 371/1

மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி - புறம் 371/2

குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து - புறம் 371/14

குடர் தலை மாலை சூடி உண தின - புறம் 371/23

பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் - புறம் 372/5

நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் - புறம் 373/16

புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் - புறம் 374/9

ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி - புறம் 376/21,22

பாறு தலை மயிர் நனைய - புறம் 377/2

மருவ இன் நகர் அகன் கடை தலை
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி - புறம் 387/17,18

புன் தலை மட பிடி இனைய கன்று தந்து - புறம் 389/9

புன் தலை பொருநன் அளியன் தான் என - புறம் 390/12

மலை அலர் அணியும் தலை நீர் நாடன் - புறம் 390/24

நனம் தலை மூதூர் வினவலின் - புறம் 391/10

பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலை வைத்த - சிலப்.புகார் 1/31

தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி - சிலப்.புகார் 3/161

கறை கெழு குடிகள் கை தலை வைப்ப - சிலப்.புகார் 4/9

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகும் - சிலப்.புகார் 5/21

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என - சிலப்.புகார் 5/84,85

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி - சிலப்.புகார் 5/115

தண்பதம் கொள்ளும் தலைநாள் போல - சிலப்.புகார் 6/160

மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் - சிலப்.புகார் 7/25

கவரி செந்நெல் காய் தலை சொரிய - சிலப்.புகார் 10/124

காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு - சிலப்.புகார் 10/193

தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது - சிலப்.புகார் 10/205

ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் - சிலப்.மது 11/37

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் - சிலப்.மது 11/75

நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை - சிலப்.மது 11/108

இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது - சிலப்.மது 12/20

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் - சிலப்.மது 12/66

கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் - சிலப்.மது 12/100

வேந்து தலை பனிப்ப ஏந்து வாள் செழிய - சிலப்.மது 14/5

குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி - சிலப்.மது 14/87

தலை பாட்டு கூத்தியும் இடை பாட்டு கூத்தியும் - சிலப்.மது 14/156

பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் - சிலப்.மது 16/74

இடி படை வானவன் முடிதலை உடைத்த - சிலப்.மது 17/163

பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி - சிலப்.மது 20/47

நீடி தலையை வணங்கி தலை சுமந்த - சிலப்.மது 21/33

மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் - சிலப்.மது 23/165

மலர் தலை வெற்பன் வரைவானும் போலும் - சிலப்.வஞ்சி 24/104

மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு - சிலப்.வஞ்சி 25/55

மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என - சிலப்.வஞ்சி 25/172

வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் - சிலப்.வஞ்சி 25/183

வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது - சிலப்.வஞ்சி 26/13,14

உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப - சிலப்.வஞ்சி 26/34

கட களி யானை பிடர் தலை ஏறினன் - சிலப்.வஞ்சி 26/60

தண்டலை தலைவரும் தலை தார் சேனையும் - சிலப்.வஞ்சி 26/80

வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத - சிலப்.வஞ்சி 26/81

முடி உடை கரும் தலை முந்துற ஏந்தி - சிலப்.வஞ்சி 26/236

முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி - சிலப்.வஞ்சி 26/242

முடி தலை அடுப்பில் பிடர் தலை தாழி - சிலப்.வஞ்சி 26/242

தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் - சிலப்.வஞ்சி 27/36

மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை
கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் - சிலப்.வஞ்சி 27/39,40

முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் - சிலப்.வஞ்சி 27/51

தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் - சிலப்.வஞ்சி 28/94

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி - சிலப்.வஞ்சி 28/101

மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி - சிலப்.வஞ்சி 28/173

அவர் முடிதலை அணங்கு ஆகிய - சிலப்.வஞ்சி 29/26

குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் - சிலப்.வஞ்சி 30/21

குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ - சிலப்.வஞ்சி 30/38

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *