Skip to content
நெய்தல்

நெய்தல் என்பது ஒரு தாவரம், அதன் பூ

1. சொல் பொருள்

(பெ) 1. பெரும்பாலும் கடற்கரைக் கழிகளில் வளரும் தாவரம், அதன் பூ(கருங்குவளை), 2. கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்படும், 3. நெய்தல் திணைக்குரிய ஒழுக்கம், 4. இரங்கல், 5. சாவுப்பறை, 6. ஒரு பேரெண்.

2. சொல் பொருள் விளக்கம்

பெரும்பாலும் கடற்கரைக் கழிகளில் வளரும் தாவரம், அதன் பூ,

  • இம்மலர் கண்ணுக்கு உவமையாகக் காட்டப்படும்
  • வைகறையில் மலரும்
  • புல்லிய அலங்கும் இதழ்களைக் கொண்டது
  • உப்பங்கழியில், நெல்வயலில் பூக்கும்
  • நறுமணம் கொண்டது. செருந்தியொடு சேர்ந்து பூக்கும்
  • இம்மலர் பூத்திருக்கும் பகுதியை ‘நெய்தல் படப்பை’ என்பர்
  • தலையில், மார்பில் அணிந்துகொள்வர்
  • எருமை இதன் புதுப்பூக்களை மேயும்
நெய்தல்
கருங்குவளை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a plant andiys flower, prodominantly found in seashore backwaters, maritime tract, Sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract, funeral drum, a very large number

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - பொருள். அகத்:5/5

நெய்தல் ஆதல் மெய் பெற தோன்றும் - பொருள். அகத்:8/2
ஆம்பல், குவளை, கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. இருப்பினும் இவை வெவ்வாறனவை என்பது இலக்கிய வழக்குகளினின்றும்
உணரப்படும்.

பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/4

இதனால், நீலம், நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.

மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/2

இதனால், ஆம்பல், நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 241

இதனால், குவளை, நெய்தல் ஆகியவை வெவ்வேறானவை என்பது பெறப்படும்.

நெய்தல் மலர் வெண்மையாகவும், கருநீலமாகவும் இருக்கும் என்பர். வெள்ளை நெய்தலை வெள்ளாம்பல் (White Indian waterlily Nymphaen lotus alba)என்றும் கருநீல நெய்தலைக் கருங்குவளை (Blue nelumbo) என்றும் கூறுவர். இதனைக் குறிஞ்சிப்பாட்டு வெவ்வேறு அடிகளில் குறிப்பிடும்.

வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84

இவற்றில்

மணிக்குலை நெய்தல்

மணிநிறமான கருநீல நிறத்ததால் இது கருங்குவளையைக் குறிக்கும் என்றும்,
எனவே முன்னது வெள்ளாம்பலைக் குறிக்கும் என்றும் சொல்வர்.

நெய்தல் மலர் நிறையத் தேன் கொண்டது. நறுமணம் மிக்கது.

கள் கமழும் நறு நெய்தல் – மது 250

நெய்தல் மலரின் தண்டு நீண்டும் பருத்தும் இருக்கும்.

களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் – பெரும் 213,214

கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ – நற் 96/7,8

நெய்தல் மலர் பெண்களின் கண்களுக்கு ஒப்புமையாகக் கூறப்படும்.

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/8

நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1

நெய்தல் மலரை அதன் இலைகளுடன் பறித்துத் தைத்து மகளிர் தழையணியாக அணிவர்.

பாசடை கலித்த கணை கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70/11,12

நெய்தல் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து, ஆண்கள் தலையணியாகவும்,
பெண்கள் கூந்தலிலும் சூடிக்கொள்வர்.

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட – பொரு 218,219

அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/1,2

நெய்தல் மலர் விடியலில் மலரும். மாலையில் கூம்பும்

வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1

நெய்தல் மலர்கள் கூம்பிப்போக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ

நெய்தல் மலர் சிறிய இலைகளை உடையது.

சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/11,12

இதன் இலை யானைக் கன்றின் செவியைப்போல் இருக்கும்.

பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவி
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/1-6

பெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை
உடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்
நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய
இளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, சட்டென
ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்

இது கழிகளிலும், நெல்வயல்களிலும், கரும்புப்பாத்திகளிலும் கலித்து வளரும்,

இரும் கழி நெய்தல் போல – குறு 336/5
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் – பதி 13/3

பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151

(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்

நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு – மது 325

நெய்தல் ஒழுக்கம் அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப – புறம் 194/1,2

ஒரு வீட்டில் சாவினை அறிவிக்கும் பறை ஒலிக்க, ஒரு வீட்டில்
திருமணத்திற்குக் கொட்டப்படும் மிகக் குளிர்ந்த முழவின் ஓசை மிக ஒலிக்க

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15

நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம்
குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால்
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 8/3

கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - நாலடி:35 9/3

நெய்தல் அறைந்து அன்ன நீர்த்து - நாலடி:40 2/4

மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின் - நான்மணி:41/3

நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல் - கள40:33/2

மணி நிற நெய்தல் இரும் கழி சேர்ப்பன் - ஐந்70:60/1

கள் நறு நெய்தல் கமழும் கொடும் கழி - ஐந்70:63/1

நெய்தல் படப்பை நிறை கழி தண் சேர்ப்பன் - திணை50:41/1

நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் - திணை150:60/3

அது மன்னும் நல்லதே ஆகும் மது நெய்தல்
வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப - பழ:84/2,3

விழித்து அலரும் நெய்தல் துறைவ உரையார் - பழ:182/3

குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரை தண் சேர்ப்ப - பழ:396/2,3

நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும் - சிறுபஞ்:28/1

மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய் - கைந்:51/1

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட - திரு 74

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்/நறும் பூ கண்ணி குறவர் சூட - பொரு 218,219

பாடல் சான்ற நெய்தல் நெடு வழி - சிறு 151

களைஞர் தந்த கணை கால் நெய்தல்/கள் கமழ் புது பூ முனையின் முள் சினை - பெரும் 213,214

கள் கமழும் நறு நெய்தல்/வள் இதழ் அவிழ் நீலம் - மது 250,251

மணி மருள் நெய்தல் உறழ காமர் - மது 282

நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு - மது 325

வாழை வள்ளி நீள் நறு நெய்தல்/தாழை தளவம் முள் தாள் தாமரை - குறி 79,80

காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல்/பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் - குறி 84,85

நீர் செறுவின் நீள் நெய்தல்/பூ சாம்பும் புலத்து ஆங்கண் - பட் 11,12

மை என விரிந்தன நீள் நறு நெய்தல்/செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி - மலை 124,125

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் - நற் 8/8

சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்/தெண் நீர் மலரின் தொலைந்த - நற் 23/7,8

சிறு பாசடைய நெய்தல்/குறுமோ சென்று என கூறாதோளே - நற் 27/11,12

நெய்தல் பாசடை புரையும் அம் செவி - நற் 47/3

மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய - நற் 78/2

கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்/அம் பகை நெறி தழை அணி பெற தைஇ - நற் 96/7,8

நெய்தல் உண்கண் பைதல் கூர - நற் 113/7

வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் - நற் 117/3

பாசடை கலித்த கணை கால் நெய்தல்/பூவுடன் நெறிதரு தொடலை தைஇ - நற் 138/6,7

வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் - நற் 155/2

வறு நீர் நெய்தல் போல - நற் 183/10

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக - நற் 187/1

வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் - நற் 190/5

பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்/நீர் அலை தோற்றம் போல - நற் 195/7,8

ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல்/புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் - நற் 239/6,7

பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு - நற் 275/6

கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்/அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ - நற் 283/2,3

பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் - நற் 287/5

கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் - நற் 349/3

வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு - நற் 372/3

நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த - நற் 382/2

பாசடை நிவந்த கணை கால் நெய்தல்/இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் - குறு 9/4,5

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி - குறு 114/1

கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் - குறு 296/4

நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும - குறு 309/6

இரும் கழி நெய்தல் போல - குறு 336/5

நெய்தல் மா மலர் பெய்த போல - குறு 397/2

அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்/நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் - குறு 401/1,2

பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் - ஐங் 2/4

மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங் 96/2

நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் - ஐங் 101/3

அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல்/நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் - ஐங் 109/1,2

நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே - ஐங் 135/3

மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்/கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு - ஐங் 151/3,4

பதைப்ப ததைந்த நெய்தல் கழிய - ஐங் 155/3

இரும் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் - ஐங் 170/2

தண் நறு நெய்தல் நாறும் - ஐங் 173/3

நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் - ஐங் 181/1

நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇ - ஐங் 182/1

நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி - ஐங் 184/1

நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி - ஐங் 184/1

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1

பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறை - ஐங் 186/3

நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் - ஐங் 187/3

வைகறை மலரும் நெய்தல் போல - ஐங் 188/3

புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்/பொன்படு மணியின் பொற்ப தோன்றும் - ஐங் 189/1,2

தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ - ஐங் 190/1

காயா கொன்றை நெய்தல் முல்லை - ஐங் 412/1

நிலன் அணி நெய்தல் மலர - ஐங் 435/2

கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்/இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் - பதி 13/3,4

நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப - பதி 19/21

நெய்தல் மரபின் நிரை கள் செறுவின் - பதி 27/10

மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல்/பாசடை பனி கழி துழைஇ புன்னை - பதி 30/2,3

வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்/நனை உறு நறவின் நாடு உடன் கமழ - பதி 51/17,18

மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்/இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த - பதி 64/16,17

சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்/பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே - பரி  7/62,63

கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை - பரி 8/74

நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே - பரி 11/104

நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன - கலி 39/45

நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள் - கலி 74/2

நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் - கலி 131/8

நெய்தல் மலர் அன்ன கண் - கலி 142/23

நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் - கலி 143/31

இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற - கலி 145/39

நெய்தல் உண்கண் பைதல கலுழ - அகம் 10/5

பாசடை கலித்த கணை கால் நெய்தல்/விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் - அகம் 70/11,12

எய்த வந்தனவால் தாமே நெய்தல்/கூம்பு விடு நிகர் மலர் அன்ன - அகம் 83/12,13

நெய்தல் அம் புது மலர் மாந்தும் - அகம் 100/17

இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் - அகம் 113/6

நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை - அகம் 119/11

சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே - அகம் 120/16

வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்/போது புறங்கொடுத்த உண்கண் - அகம் 130/12,13

கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் - அகம் 150/8

நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்/பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப - அகம் 160/13,14

இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்/கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ - அகம் 170/4,5

சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் - அகம் 230/2

மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப - அகம் 240/3

சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்/மணி ஏர் மாண் நலம் ஒரீஇ - அகம் 290/14,15

தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல்/நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப - அகம் 360/4,5

வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல்/தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி - அகம் 370/10,11

நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது - அகம் 371/7

நேமி தந்த நெடு_நீர் நெய்தல்/விளையா இளம் கள் நாற பல உடன் - அகம் 400/21,22

நெய்தல் அம் கானல் நெடியோய் - புறம் 10/12

சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் - புறம் 61/2

ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் - புறம் 194/1

நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் - புறம் 209/2

கழி நெய்தல் பூ குறூஉந்து - புறம் 339/8

நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே - புறம் 389/17

கைதை வேலி நெய்தல் அம் கானல் - புகார்:6/150

மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள - புகார்:9/58

சேடல் நெய்தல் பூளை மருதம் - மது:22/69

சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் - வஞ்சி:28/115

நெஞ்சு நடுக்கு உறூஉம் நெய்தல் ஓசையும் - மணி:6/71

நீடிய நெய்தல் அம் கானல் நெடும் தகை - சிந்தா:3 516/3

புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி - பால:1 17/2

நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் - பால:2 19/4

சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி - கிட்:15 32/2

நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால் - யுத்1:8 27/4

நெய்தலும் குமுத பூவும் நெகிழ்ந்த செங்கமல போதும் - பால:14 53/2

காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம் - கிட்:10 50/1

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட - திரு 74

தளை அவிழ் தண் நிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எல்லாம் - தேவா-சம்:49/1

பொன் இயல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவு எய்து பொய்கை - தேவா-சம்:54/1

நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்து எங்கும் - தேவா-சம்:278/1

நீலம் நெய்தல் தண் சுனை சூழ்ந்த நீள் சோலை - தேவா-சம்:1075/1

காவி இரும் கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே - தேவா-சம்:1383/4

நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய - தேவா-சம்:1549/1

கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் - தேவா-சம்:2154/3

துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் - தேவா-சம்:2566/3

மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை - தேவா-சம்:2716/1

வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் - தேவா-சம்:2727/1

தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் - தேவா-சம்:3578/1

அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல்
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் - தேவா-அப்:535/1,2

திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல்
குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி - தேவா-அப்:952/1,2

நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று - தேவா-அப்:1013/1

நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் - தேவா-அப்:1158/1

நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே - தேவா-அப்:2200/4

கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் - தேவா-சுந்:775/3

அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்
வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் - திருமந்:1003/1,2

நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் - 4.மும்மை:5 6/4

நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் - 4.மும்மை:5 10/4

நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் - 4.மும்மை:5 10/4

காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் - 4.மும்மை:5 33/4

நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ - 4.மும்மை:5 40/4

தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் - 6.வம்பறா:1 608/4

கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி - 6.வம்பறா:1 625/1

நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி - நாலாயி:1062/3

நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் - நாலாயி:1493/3

குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி - நாலாயி:1749/3

பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல்
தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் - சீறா:4130/2,3

போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம் - சீறா:4755/4

ஏனல் அம் புனக்கிரி இடமும் நெய்தல் அம் - வில்லி:11 105/2

நெய்தல் புலையன் நெறியில் சாற்றி - உஞ்ஞை:36/158

கோல கழுநீர் குழி வாய் நெய்தல்
எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும் - உஞ்ஞை:48/48,49

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “நெய்தல்”

  1. முனைவர் ஜெஸிந்தா ராணி.அ

    நெய்தல் மலர் பற்றிய தரவுகள்
    மிகவும் சிறப்பு
    விரிவான வகையில் அமைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *