Skip to content
தரு - tree - மரம்

தரு என்பதன் பொருள் மரம்

1. தரு சொல் பொருள் விளக்கம்

மரம்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

tree

3. வேர்ச்சொல்லியல்

இது tree என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது தரு என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு மூலச்சொல்

தமிழில் 81+ மரங்களின் பெயர்கள்

அரையம், துவர், துடரி, புன்னை, புன்னாகம், புன்கு, புழகு, உழுஞ்சில், உழிஞ்சில், பிண்டி, பிடவம், தில்லை, சிறுமாரோடம், இற்றி, இல்லம், இருப்பை, இரவம், இரத்தி, இத்தி, இகணை, பாலை, பாகல், சாந்து, ஆர், ஆத்தி, பலாசம், பயினி, பசும்பிடி, தடவு, தகரம், சண்பகம், அதவம், அசோகம், அகில், அகரு, ஈந்து, சூரல், பூழில், பூவை, எறுழம், தெறுழ், பெண்ணை, தேறு, தேமா, போந்தை, போந்து, கவிர், கரந்தை, கமுகு, கபிலம், கணிகாரம், கண்டல், கடம்பு, கஞ்சகம், நவிரல், மருதம், மரவம், மகிழம், வன்னி, வடவனம், காழ்வை, நாவல், மாதுளம், வாகை, குருந்து, குருந்தம், குருகிலை, குமிழ், நுணவம், முருக்கு, முஞ்ஞை, கூவிளம், ஞெமை, வேம்பு, வேப்பு, கொக்கு, நொச்சி, கோங்கு, கோங்கம், மோரோடம், அரசு

மரம்

மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும்.

மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள், வடிவங்கள், பட்டைகள், பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன.

ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும்.

மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கிய குறியீடுகளாக இருந்து வருகின்றன. உதாரணமாக நோர்ஸ் பழங்கதைகளில்Yggdrasil, ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம்.

`தண்ணீரை பூமியில் தேடாதே, அதை வானத்திலிருந்து வரவழை’ என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான்.

 `விவசாயிகளும் தானியச் சாகுபடியோடு மரங்களையும் வளர்த்து வர வேண்டும். மரச் சாகுபடியும் ஒரு விவசாயம்தான். அதுவும் வருமானம் கொடுக்கும்’ என்பது வல்லுநர்களின் கருத்து.

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட செயலிதான் இது. இதில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் 22 மர வகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.

மூங்கில், சவுக்கு, தேக்கு, வேம்பு, கிளரிசீடியா, வாகை, தைல மரம், மலைவேம்பு, கடம்பு உள்ளிட்ட 22 மர வகைகள் உள்ளன. இதன் சேவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். 

அ’கர வரிசைதரு

  1. அகத்தி
  2. அசோக
  3. அத்தி
  4. அரச
  5. ஆப்பிள்
  6. ஆல

இ’கர வரிசைதரு

  1. இரப்பர்
  2. இலந்தை
  3. இலவ
  4. இலுப்ப
  5. ஈச்ச

எ’கர வரிசைதரு

  1. எலுமிச்சை

ஒ’கர வரிசைதரு

  1. ஒதிய மரம்

க’கர வரிசைதரு

  1. கடம்ப
  2. கருங்காலி
  3. கருவேல
  4. கலயாண முருங்கை
  5. கறிவேப்பிலை
  6. கொடுக்காபுளி
  7. கொய்யா
  8. கொன்றை

ச’கர வரிசைதரு

  1. சந்தன
  2. சப்போட்டா
  3. சவுக்கு
  4. சீத்தா
  5. Senbagam

த’கர வரிசைதரு

  1. தூங்கு மூஞ்சி
  2. தென்னை
  3. தேக்கு

ந’கர வரிசைமரம்

  1. நாகலிங்க
  2. நாரத்தை
  3. நாவல்
  4. நுணா
  5. நெட்டிலிங்க
  6. நெல்லி

ப’கர வரிசைமரம்

  1. பப்பாளி மரம்
  2. பலா மரம்
  3. பவழ மல்லி மரம்
  4. பாக்கு மரம்
  5. பிளம் மரம்
  6. பனை மரம்
  7. புங்கை மரம்
  8. புன்னை மரம்
  9. புளிய மரம்
  10. பெர்ரி மரம்
  11. பேரிக்காய் மரம்
  12. பூவரசு மரம்
  13. பொந்த புளியமரம்

ம’கர வரிசைமரம்

  1. மகிழ மரம்
  2. மருதானி மரம்
  3. மா மரம்
  4. மாதுளை மரம்
  5. முந்திரி மரம்
  6. முருங்கை மரம்
  7. மூங்கில் மரம்

ய’கர வரிசைமரம்

  1. யூகலிப்டஸ் மரம்

வ’கர வரிசைமரம்

  1. வன்னி மரம்
  2. வாகை மரம்
  3. வாதனாராயண மரம்
  4. வாழை மரம்
  5. வில்வ மரம்
  6. விளா மரம்
  7. வேப்ப மரம்
  8. வேலிக் கருவை

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *